தமிழ் சின்னத்திரையில் கொடிக்கட்டி பரந்த நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு பூந்தமல்லியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தனது காதல் கணவர் ஹேம்நாத் உடன் தங்கி இருந்த பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சித்ராவின் தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தன்னுடைய மகளின் மரணத்திற்கு காரணம் ஹேம்நாத் தான் என தொடர்ந்து நீதிமன்றத்தில், ஹேம்நாத்துக்கு தண்டனை வாங்கி கொடுக்க போராடி வந்தனர் சித்ராவின் தாயும் தந்தையும்
சுமார் 3 வருடம் மகளிர் மகிலா நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட ஹேம்நாத் உட்பட ஏழு பேரையும் சித்ராவை கொலை செய்ததற்கான எந்த ஆதாரமும், சாட்சியோ, முகத்திரமோ இல்லை என்பதை சுட்டிக்காட்டி விடுதலை செய்தார் நீதிபதி ரேவதி . இந்த தீர்ப்பு தான் சித்ராவின் தந்தையை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சித்ராவின் தந்தை காமராஜ் தான் முன்னாள் காவல்துறை உதவி ஆய்வாளராக இருந்தும் தனது மகளின் தற்கொலைக்கு காரணமானவர்களை தண்டனை வாங்கி தரமுடியவில்லை என்ற மன வேதனையில் சித்ராவின் துப்பட்டாவிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் .
இதனை கண்ட அவரது மனைவி சரோஜா உடனடியாக அருகில் உள்ளவர்கள் உதவியுடன் கணவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது ஏற்கனவே காமராஜ் இறந்து விட்டார் என கூறியுள்ளனர்.
சித்ராவின் தந்தை தற்கொலை குறித்து திருவான்மியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: அப்பார்மெண்டில் இறந்து கிடந்த இன்ஸ்டா பிரபலம்.. கண் கலங்க வைத்த கடைசி பதிவு
இதையும் படிங்க: வந்த உடனேயே கைதா? ஆர்ப்பாட்டம் நடத்த விடுங்கப்பா? போலீஸாரிடம் கொந்தளித்த சீமான்