25,000 ஆசிரியர்களை உச்ச நீதிமன்றம் பணிநீக்கம் செய்தது மம்தா பானர்ஜி அரசுக்கு மிகப்பெரு தலைவலியாக மாறியுள்ளது. கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மம்தா பானர்ஜி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தின் கீழ் 25,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் நியமனத்தை ரத்து செய்து, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஆசிரியர்கள் தேர்வு செய்த செயல்முறைகள், கையாளுதல் போன்றவை மோசடியால் பாதிக்கப்பட்டு உள்ளது என்றும் அதன் நம்பகத்தன்மை, சட்டபூர்வமான தன்மை கேள்விக்குரியதாக மறியுள்ளதாக என்றும் உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி பி.வி.சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை என்று கூறியது. இந்த நியமனங்கள் மோசடியின் விளைவாக ஏற்பட்டதாகவும், எனவே அவை மோசடியானவை என்றும் நீதிமன்றம் கூறியது.
இதையும் படிங்க: ‘பசியோடு இருப்பவர் நூலகத்துக்கு செல்வாரா..?’ கிராமங்களில் நூலகம் கேட்டவருக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி..!
மூன்று மாதங்களுக்குள் புதிய தேர்வு செயல்முறையை முடிக்குமாறு நீதிமன்றம் மாநில அரசைக் கேட்டுக் கொண்டது. இந்தப் புதிய செயல்முறையில் தேர்ச்சி பெறுபவர்கள் 2016 ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டதில் இருந்து பெற்ற சம்பளத்தைத் திருப்பித் தர வேண்டியதில்லை. ஆனால், அவ்வாறு செய்யாதவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு நீதிமன்றம் தளர்வு அளித்துள்ளது. மேலும் அவர்கள் தற்போதைய பதவியில் தொடரலாம் என்றும் கூறியுள்ளது.
மம்தா பானர்ஜி அரசு உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றத்தில் எதிர்த்து, மோசடி மூலம் தேர்ச்சி பெற்றவர்களையும், நேர்மையாக வேலைக்கு சேர்ந்தவர்களையும் பிரித்து அறிய வலியுறுத்தியுள்ளது.
2016 ஆம் ஆண்டு மாநில அளவிலான தேர்வுக்கு 23 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து இருந்தனர். காலியாக உள்ள பதவிகளின் எண்ணிக்கை 24,640. ஆனால், 25,753 நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இந்த சூப்பர் நியூமரிக் பதவிகள் சட்டவிரோத ஆட்சேர்ப்புக்கு இடமளிப்பதாகக் கூறப்படுகிறது.

ஆசிரியர் ஆட்சேர்ப்பில் நடந்த முறைகேடுகள் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு பெரும் சவாலாக அமைந்தது. முன்னாள் கல்வி அமைச்சர், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய துணைத் தலைவர் உட்பட அதன் உயர்மட்டத் தலைவர்கள் பலர் இந்த வழக்கு தொடர்பாக சிறையில் உள்ளனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மம்தா பானர்ஜிக்கு கடும் தோல்வி என்று தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா, ''கல்வி அமைச்சராகப் பணியாற்றி, ஏராளமான பணத்துடன் பிடிபட்ட மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளர் பார்த்தா சாட்டர்ஜி, இந்த ஊழலில் ஈடுபட்டதற்காக ஏற்கனவே சிறையில் உள்ளார். இந்த மிகப்பெரிய மோசடி ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையை நாசமாக்கியதற்கு முதலமைச்சர், பொறுப்பேற்க வைக்கப்பட்டு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: ‘முதலில் புரிந்து கொள்ளுங்கள்’.. காங்கிரஸ் எம்.பி மீதான FIR ரத்து.. போலீஸாருக்கு உச்ச நீதிமன்றம் குட்டு..!