இந்தியாவில் பொதுவாக சைபர் கிரைம் குற்றவாளிகள் அதிகம் படிப்பறிவு இல்லாதவர்கள், முதியவர்கள் போன்றவர்களை தங்களது டார்கெட் என பிக்ஸ் செய்து கொள்வார்கள். அவர்களது மொபைல் எண்ணுக்கு அழைத்து, வங்கில் இருந்து போன் செய்கிறோம். உங்கள் வங்கி எண் முடக்கப்பட்டு விட்டது. உங்களது ஏடிஎம் கார்டு பிளாக் ஆகி விட்டது என்றெல்லாம் அவர்களை பயமுறுத்தி அவர்கள் வாயிலேயே அவர்களது வங்கி கணக்கு எண், வங்கி ஏடிஎம் கார்டு எண் ஆகியவற்றை பெற்றுக்கொண்டு அவர்களது வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் சுருட்டு விடுவார்கள். தற்போது இது டிஜிட்டல் அரெஸ்ட் என்னும் புது வடிவில் உருபெற்றுள்ளது.

நீதிபதி போன்ற உயர் பதவியில் உள்ள நபர்களை போலவே உடை அணிந்து, மக்களுக்கு வீடியோ கால் செய்து, செய்யாத ஒரு குற்றத்தை செய்ததாக கூறி அதற்கு பணம் பறிக்கும் செயலும் நடந்து வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் மேலாக, அமெரிக்கர்கள் மற்றும் வெளிநாட்டினர் அதிகமாக உபயோகப்படுத்தும் பே பால் என்றும் நிதி பகிர்வு செயலியை மையமாக வைத்து தெலுங்கானாவில் ஒரு கும்பல் கோடிக்கணக்கில் பணம் சுருட்டியது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதையும் படிங்க: அந்தமாதிரி நேரத்தில் கள்ளக்காதலியுடன் சிக்கிய கணவன்.. மனைவிக்கு பயந்து ஜன்னல் வழியே குதித்து ஓட்டம்..!
பே பால் என்பது ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கும், பணப் பரிமாற்றங்களை செய்ய பயன்படுத்தப்படும் ஒரு உலகளாவிய மின் வணிக நிறுவனம். இது அமெரிக்காவைச் சேர்ந்தது. ஆனால் இந்த நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவு பெறாத காரணத்தால் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் சந்தா மனஸ்வினி. இவர் மாதப்பூரில் எக்ஸிட்டோ சொல்யூஷன்ஸ் என்ற கால் சென்டர் நிறுவனத்தை துவங்கினார். இதில் பணிபுரிய வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் நுனி நாக்கில் ஆங்கிலம் பேச பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் அமெரிக்க குடிமக்கள், என்.ஆர்.ஐ. களை போனில் அழைத்து பே-பால் ஊழியர்கள் போல் பேசி நடிப்பார்கள். இதற்காக துபாயைச் சேர்ந்த ஆசாத், விக்கி மூலம் பே - பால் கணக்கு விவரங்களைச் சேகரித்து வந்துள்ளனர்.
இலக்கு வைக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு முதலில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டு வாடிக்கையாளர் சேவை மைய எண் முதலில் அவர்களுக்கு வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் அந்த எண்ணை அழைத்தால், மனஸ்வினி குழுவினர் உங்கள் பே-பால் கணக்கில் $500-1000 வரை சட்டவிரோத பரிவர்த்தனைகள் நடந்ததாக கூறுவர்.

பே-பால் நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட கூடுதல் பணத்தைத் திருப்பித் தராவிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் மிரட்டுவர். அவ்வாறு அமெரிக்க குடிமக்களிடமிருந்து மிரட்டி பெறப்பட்ட பணம் பல்வேறு கணக்குகள் மூலம் கிரிப்டோகரன்சியாக மாற்றப்பட்டு துபாய்க்கு அனுப்பப்பட்டது. இந்த மோசடியின் மூளையாக குஜராத்தைச் சேர்ந்த கைவன் படேல் என்ற ஜாது பாய், துபாயில் வசிக்கும் அவரது சகோதரர் விக்கி மற்றும் அவர்களது மற்றொரு கூட்டாளி ஆசாத் ஆவர். இந்த மூவரும் தலைமறைவாக உள்ள நிலையில் மனஸ்வினி இந்த கால் சென்டரை அவர்களுடன் இணைந்து நடத்தி வந்துள்ளார்.
இதில் 22 பெண்கள் மற்றும் 41 ஆண்கள் இவர்களுக்காக பணி புரிந்து வந்துள்ளனர். இதுகுறித்த தகவல் கிடைக்கப்பெற்ற தெலுங்கான சைபர் கிரைம் போலீசார் மனஸ்வினி உட்பட அந்த கால் சென்டரில் பணியாற்றிய அனைவரையும் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உத்தரவுப்படி 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சைபர் பாதுகாப்பு தலைமை இயக்குநர் ஷிகா கோயல் தெரிவித்தார்.

சைபர் க்ரைம் டி.ஜி. கோயல் பேசுகையில் அவர்கள் அனைவரும் கால் சென்டரில் பணிபுரிந்து அங்கு அவர்கள் சட்டத்திற்கு புறம்பான குற்றங்களைச் செய்வதாக தெரிந்தே செய்தனர். அதனால்தான் அவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறினார். தெலுங்கானாவில் சைபர் குற்றங்களை முற்றிலுமாகத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாதப்பூர் கால் சென்டரில் பணிபுரிந்த அனைவரும் அமெரிக்க நேரப்படி ஷிப்டுகளில் வேலை செய்து வந்துள்ளனர். இதுபோன்ற ஷிப்டுகளில் இயங்கும் கால் சென்டர்களில் போலீசார் ஆய்வுகளை மேற்கொண்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்று கோயல் பரிந்துரைத்தார்.
இதையும் படிங்க: தொட்டா நீ கெட்ட.. வாட்ஸ் அப்பில் வரும் வீடியோ கால்.. சைபர் கிரைம் மோசடியில் சிக்கிய எம்.எல்.ஏ..!