தங்கத்தினாலான புத்தர் சிலையை உருக்கி விற்பனை செய்துதான் ஸ்ரீரங்கம் கோயில் கட்டப்பட்டதாக திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
சென்னை, தேனாம்பேட்டையில் வக்பு திருத்த சட்டம் குறித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாடாளுமன்ற எம்.பி.,யும், திமுக துணை பொது செயலாளருமான ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார். அப்போது, ''தங்கத்தினால் ஆன புத்தர் சிலையை உருக்கி விற்பனை செய்துதான் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் கட்டப்பட்டது.

ஸ்ரீரங்கம் கோயிலே திருநங்கை ஆழ்வார், புத்தர் சிலையை விற்று கட்டிய ஒரு கோயில் தான். முழு தங்க சிலையை எடுத்துக் கொண்டு போய் அதை உருக்கி விற்றுதான் ஸ்ரீரங்கம் கோவிலையே கட்டினார்கள். இதை சொன்னால் நான் பெருமாளுக்கு எதிரி என்பார்கள்.
இதையும் படிங்க: தர்மபுரி மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்..! கலக்கத்தில் திமுக மா.செக்கள்..!
காந்தியை சுட்டுக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்- காரர்களை காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பதற்கு வல்லபாய் பட்டேல் முயற்சி செய்தார். ராகுல் காந்தி, காந்திக்கு பேரனா? நேருவுக்கு பேரனா என்பதெல்லாம் தெரியாது. ஆனால், அவர் இன்றைக்கு பெரியாரின் பேரனாக இருக்கிறார். ஜனநாயகம் பேசுகிறார். என்ன புத்தகங்கள் படிக்கலாம் என்று எங்களிடமெல்லாம் கேட்கிறார். நாங்கள் எல்லாம் புத்தகம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

நாட்டில் பெரும்பான்மையாக காங்கிரஸ் இருக்கிறதா என்பது அல்ல. ஆனால் இன்னமும் நம்பிக்கை ஒளியை ராகுல் காந்தி மூலமாக, காங்கிரஸ் மூலமாக நாங்கள் பெற்றுக் கொண்டிருக்கிறோம். இஸ்லாமியர்கள் என்றால் இந்த தேசியத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்கிறார்கள். எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்... அதை சொல்வதற்கு நமக்கு பயமாக இருக்கிறது. பகத்சிங்கை பற்றி பேசுகிறீர்களே... வீரசவர்காரை பற்றி பேசுகிறீர்களே… இன்னும் யார் யாரைப் பற்றி எல்லாம் பற்றி பேசுகிறீர்களே…

அஸ்வா உலக்கா என்று ஒரு போராடிய பற்றி பேசவில்லை. அஸ்வா உலக்கா என்று ஒரு போராளி 36 வயது. அன்றைக்கு ரிசர்வ் பேங்க் பணத்தை வைத்திருக்கின்ற ஒரு பெரிய வங்கியிலே கோடிக்கணக்கான பணத்தை எடுத்து வந்தார். அதில், ஆயுதங்களை வாங்கி போராட்டத்திற்காக பயன்படுத்தி பிடிபட்டு தூக்கு தண்டனை அனுபவித்த ஒரு கைதி. சாகும்போது என்ன சொன்னார். சுதந்திர இந்தியாவை பார்க்க முடியவில்லை. எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று. ஒருநாள் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும், இந்தியர்களும் சேர்ந்து வளமான இந்தியாவை உருவாக்குகிற போது அந்த இந்தியாவை நான் எங்கிருந்தாவது பார்த்துக் கொண்டிருப்பேன் என்று சொன்னார்.

அப்படியானால் இந்த தேசத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றால் வெள்ளைக்காரர்கள் சுதந்திரம் கொடுத்து விட்டு வெளியே கிளம்பும்போது என்ன சொன்னார்கள். அவர்கள் அதிகாரத்தின் கீழே இந்தியா இருக்கிறது என்றார்கள். இந்தியாவில் அடக்குமுறை செய்தார்கள். ஒரு நாடு கட்டமைப்புக்குள் வந்தது பொய்தான். தேசியவாதம் என்பது நேற்று வரை திருப்பதி நம்மோடு இருந்தது. தமிழ்நாட்டில் இருந்தது. இன்று போய் நாம் உரிமை கொண்டாட முடியுமா? தேசியம் வந்துவிடுமா? பாவணார் சொன்னது போல எதுவரை உன் மொழி நீள்கிறதோ... அதுவரை உன் நாடு. எதுவரை உன் மொழி வாழ்கிறதோ அதுவரை உன் இனம்'' என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஞானசேகரன் கொள்ளையடித்த 250 சவரன் நகை… 3 மனைவிகளுடன் ஆடம்பரம்… பல பெண்களுடன் உல்லாசம்..!