உத்தர பிரதேச மாநிலத்தில் மதுவுக்கு அடிமையான இரு குடிகாரர்களின் துன்புறுத்தலால் வெறுத்துப்போன அவர்களுடைய மனைவிகள் இருவரும்தான் இந்த அதிரடி முடிவை எடுத்திருக்கிறார்கள்.
உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூர் அருகே தியோரியா என்ற நகரம் உள்ளது. அங்குள்ள சிவன் கோவிலுக்கு இரண்டு பெண்கள் கையில் மலர் மாலைகளுடன் வந்தனர்.
அவர்களில் ஒரு பெண்ணின் பெயர், கவிதா. மற்றொருவரின் பெயர் குஞ்சா என்கிற பப்லு.

இரண்டு பெண்களுமே மனக்கோளத்தில் வந்ததை பார்த்ததும் கோவிலில் இருந்த பக்தர்களும் பூசாரிகளும் வியப்படைந்தனர். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்களில் குஞ்சா என்ற பெண், மணமகன் போல் கவிதாவின் நெற்றியில் குங்குமம் வைத்து மாலை அணிவித்தார். பின்னர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டு சிவன் சன்னதியிலேயே திருமணம் செய்து கொண்டனர்.
இதையும் படிங்க: கர்ப்பிணி மனைவி, பலாத்காரம் செய்த நண்பர்கள..!! வீடியோ காலில் ரசித்த சைக்கோ கணவன்
அதன் பின் சிவன் முன்பாக இருவரும் ஒன்றாக நின்று கொண்டு, "வாழ்நாள் முழுவதும் இருவரும் இணை பிரியாமல் இருப்போம் "என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு ஐந்து முறை கோவிலை வலம் வந்து பின்னர் திரும்பிச் சென்றனர்.
இதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால் 'மணமக்கள்'இருவரும் இன்ஸ்டாகிராம் வழியாகத்தான் முதலில் அறிமுகம் ஆகி இருக்கிறார்கள். அவர்களுடைய கணவர்கள் இருவரும் மது போதைக்கு அடிமையாகி ஒவ்வொரு நாளும் தங்களை துன்புறுத்தி வருவது பற்றி இருவரும் சோகத்துடன் தகவல்களை பரிமாறிக் கொண்டனர்.

இந்த நட்பு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு பிணைப்பாக மாறி இருக்கிறது. இது பற்றி கருத்து தெரிவித்த அவர்கள், "ஒரு கட்டத்தில் எங்களுடைய கணவன்மார்களின் கொடுமையை பொறுக்க முடியாமல் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவது பற்றிய முடிவுக்கு வந்தோம். இனியாவது எங்களுக்கு அன்பான, அமைதியான வாழ்க்கை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
திருமணத்திற்கு பிறகு நாங்கள் இருவரும் தம்பதியாக கோரக்பூரில் வசிக்க திட்டமிட்டு இருக்கிறோம். இதற்காக வாடகை வீடு வந்தும் பார்த்து வைத்திருக்கிறோம் குடும்பச் செலவுகளுக்காக இருவருமே வேலைக்குச் செல்ல முடிவு செய்து இருக்கிறோம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இந்த திருமண காட்சியைப் பார்த்த கோவில் பூசாரி உமா சங்கர் பாண்டே கூறும் போது, "அந்த பெண்கள் இருவருமே திருமண மாலைகள் மற்றும் குங்குமம் போன்ற மங்கலப் பொருட்களை வாங்கி வந்து, உரிய சடங்குகளை செய்து அவர்களே திருமணத்தை நடத்திக் கொண்டனர்.
அதன் பின்னர் அவர்கள் இருவரும் அமைதியாக சென்றுவிட்டனர்" என்றார்
இதையும் படிங்க: வேங்கைவயல் வழக்கு.. பட்டியலினத்துவர் மீது குச்சச்சாட்டு.. சிபிஐ விசாரணை கேட்கும் திருமாவளவன்