திருச்சி என்.சிவா... பேச்சால் கவரப்பட்ட திமுக தொண்டர்களை தனது ஆழ்ந்த பேச்சால் ஈர்ப்பவர். எழுத்து, பேச்சு, இலக்கியம் புகழோங்கி நிற்பவர். மக்களவை உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் நாடாளுமன்றத்தில் ஆழ்ந்த கருத்துக்களை எடுத்துரைப்பவர்.
பல சமுதாய, விழிப்புணர்வு மற்றும் அரசியல் தொடர் கட்டுரைகளையும் எழுதியவர். 'தலைநகரில் தமிழன் குரல்', 'குற்றவாளிக் கூண்டில் சாக்ரடீஸ்' என்ற நூல்களை நுட்பமாக படைத்தவர். மாணவப் பருவம் முதலே திமுக மாணவரணியில் சேர்ந்து கட்சிப் பணியாற்றியவர். 1976 நெருக்கடி நிலையின் போது மிசாக் கைதியாகச் சிறை சென்றவர். திமுகவின் நட்சத்திர நாயகராக திகழும் அவருக்கு பிறந்த மகன் திருச்சி சூர்யாவோ அரசியல் களத்தில் நஞ்சாகச் செயல்பட்டு வாத்தியார் பிள்ளை மக்கு என்கிற பழமொழியை நிரூபித்து வருகிறார்.

திருச்சி சிவாவின் அரசியல் பயணமும், செயல்பாடுகளும் தமிழக அரசியல் களத்தில் அவரது கட்சி மாற்றங்கள், சர்ச்சைக்குரிய பேச்சுகள் மூலம் சந்தி சிரிக்கிக்கின்றன. திருச்சி சூர்யா ஆரம்பத்தில் திமுகவில் இருந்தவர். ஆனால், 2022 ஆம் ஆண்டு மே மாதம், திமுகவில் தனக்கு உரிய அங்கீகாரமோ, பதவியோ வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி, அவர் கொள்கையில் முரன்பாடான கட்சியான பாஜக இணைந்தார். அப்போதே அப்பாவையே அவமானப்படுத்தி, தன்னை அடையாளப்படுத்தும் அரசியலை அவர் கையெலெடுத்து இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பியது.
இதையும் படிங்க: ‘மக்களின் உடல்நலனுக்காக பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்குங்கள்’.. மத்திய அரசுக்கு மாநிலங்களவை எம்.பி.க்கள் வலியுறுத்தல்..!
பாஜகவில் இணைந்த பிறகு, அவர் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பாஜகவில் இணைந்த பிறகு, திருச்சி சூர்யா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் தீவிர அடிமையாகவே காட்டிக்கொண்டார். திமுகவுக்கு எதிராகவும், குறிப்பாக தனது தந்தை திருச்சி சிவாவின் கட்சியை விமர்சித்து பேசிய பேச்சுகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவரது பேச்சுகள் குப்பையில் அள்ளிப்போட்ட நெருப்பாகவே புகைந்தன.

தன் உட்கட்சி நிர்வாகிகளையும் உரசிப்பார்த்தார். பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சியுடன் தொலைபேசியில் ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், 2022 நவம்பரில் அவர் 6 மாதங்களுக்கு கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் மீண்டும் பாஜகவில் இணைந்தாலும், 2024 ஜூன் மாதம் மீண்டும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகவும், கட்சிக்கு களங்கம் விளைவித்ததாகவும் கூறி அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.
2024 டிசம்பரில், திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்தார். இதற்கு காரணமாக, அவர் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட தலைமையை விமர்சித்ததையும், கட்சியில் தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டதையும் சுட்டிக்காட்டினார். பாஜகவை விட்டு விலகிய பிறகு, அவர் அண்ணாமலை, கட்சி தலைமை மீது ஆதாரமற்ற கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தொடர்ந்து பேசி வருவதை யாரும் ரசிக்கவில்லை.

அவர் திமுக, பாஜக, மற்றும் பிற அரசியல் கட்சிகளை விமர்சிப்பதோடு, சாதி அடிப்படையிலான கருத்துகளையும், சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது அவதூறு பரப்பியதாக 2024 நவம்பரில் அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டது. இது அவரது தற்போதைய அரசியல் போக்கு தனிப்பட்ட விமர்சனங்கள், சர்ச்சைகளை மையமாகக் கொண்டதாகவே இருக்கிறது.
திருச்சி சூர்யாவின் அரசியல் போக்கை புரிந்து கொள்ளும்போது, சில விஷயங்கள் தெளிவாகின்றன. திமுகவில் இருந்து பாஜகவுக்கு மாறியது, பின்னர் பாஜகவை விட்டு விலகியது என அவரது பயணம், அரசியலில் தனிப்பட்ட அங்கீகாரத்தையும் பதவியையும் தேடும் முயற்சியாகவே தெரிகிறது.
சமீபத்திய காலமாக அவர் சாதி தொடர்பான விவாதங்களை தூண்டுகிறார். எதிர்க்கட்சி தலைவர்களை தாக்குகிறார். இது அவரது தற்போதைய அரசியல் பிற்போக்குத் தனத்தையே பிரதிபலிக்கிறது. த்ற்போது எந்த கட்சியுடனும் இணையாமல், சுயாதீனமாக செயல்படுவது அவரது அடுத்த அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்பதை தெளிவுபடுத்தவில்லை.
திருச்சி சூர்யாவின் அரசியல் போக்கு தற்போது ஒரு கட்சி அல்லது சித்தாந்தத்தை மையமாகக் கொண்டதை விட, தனிப்பட்ட அரசியல் அடையாளத்தை உருவாக்குவதற்கும், சர்ச்சைகள் மூலம் கவனம் பெறுவதற்கும் உந்தப்பட்டதாக தோன்றுகிறது. அவரது எதிர்கால அரசியல் பாதையை மூடிவிடும்.

2024 நவம்பர் மாதம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன் ஆகியோரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதில், சீமான் குறித்து 15 ஆடியோ பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் பழிவாங்கப்படுவதாகவும், சாட்டை துரைமுருகன் மிரட்டல் வீடியோக்களை பதிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதெல்லாம் அவரது வாய்க்கொழுப்பிற்கு அவர் வைத்துக் கொண்ட சூன்யம்.
அவர் பாஜகவில் இருந்தபோது, பலரை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட்டதால், அவதூறு பரப்புவதாக புகார்கள் எழுந்தன. இதற்கு முன்பு 2021 ஆம் ஆண்டு, 'ரவுடி பேபி சூர்யா' என்று அழைக்கப்படும் யூடியூபர் ஆபாசமாக பேசியதற்காக சர்ச்சையில் சிக்கியிருந்தார். இது திருச்சி சூர்யா சிவாவுடன் தொடர்பில்லாத வேறு சம்பவம் என்றாலும், திருச்சி சூர்யா ஆபாச பேச்சை அது பிரதிபலித்தது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது அவர் 'அரசியலுக்கு அன்பிட்' என்பதையே உணர்த்துகிறது.
நாளொரு பேச்சு... பொழுதொரு வண்ணம்... அவன் பெயர் மனிதல்ல..!
இதையும் படிங்க: முப்பது ஆண்டுகள் ஆட்சியில் இருப்போம் என்கிறார் அமித் ஷா.. எங்கள் வாரிசுகள் உங்கள் சட்டங்களை தூக்கி எறிவார்கள்... திருமா ஆவேசம்!