சென்னையில் இன்று முதலமைச்சர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். இதில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைய கூடாது என்று தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா முதல்வர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் இதுக்குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சராமாரியான கேள்விகளை அடுக்கியுள்ளார். இதுக்குறித்த அவரது x தள பதிவில், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடக்காது, அதனால் எந்த மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படாது என உறுதியளித்த பிறகும் கூட, தொகுதிகள் குறைகிறது என்ற பொய்யைப் பரப்ப அனைத்துக் கட்சிகளையும் இணைத்து ஒரு கூட்டம் நடத்திய முதல்வரே,
இதையும் படிங்க: விளம்பர மோகம் கொண்ட வெற்று அறிவிப்புகள்.. எந்த வகையிலும் பலனளிக்காத பட்ஜெட்.. வானதி விளாசல்..!

அப்படியே அந்தக் கூட்டத்தில் கேரளக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டக் கூடாது என அம்மாநில முதல்வரிடமும், மேகதாது அணையை கட்டும் திட்டத்தை கைவிட்டு தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை வழங்கவேண்டும் என கர்நாடக முதல்வரிடமும் நீங்கள் வலியுறுத்தியிருக்கலாமே? தொகுதிகள் குறைப்பு என்ற ஒரு பொய் குற்றச்சாட்டை நிரூபிக்க இத்தனை பாடுபடும் நீங்கள், நமது அண்டை மாநிலங்களால் புதைந்து போன தமிழக உரிமைகளை மீட்டெடுக்க ஒரு துரும்பையாவது கிள்ளிப்போட்டீர்களா?

சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கை மறைக்க ஹிந்தி திணிப்பு என்றும், டாஸ்மாக் ஊழலை மறைக்க தொகுதி மறுசீரமைப்பு என்றும் விதவிதமான நாடகங்களை அரங்கேற்றுவதிலும், அடிக்கடி காணொளி நடித்து வெளியிடுவதிலுமே முழு கவனம் செலுத்தும் நீங்கள், நடைமுறையில் உள்ள மக்கள் பிரச்சினைகளுக்கு எப்பொழுது தான் தீர்வு காண்பீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் பின்வாங்கிய திமுக.. எதற்காக இந்த பொய் பிரச்சாரம்? புள்ளி விவரங்களுடன் வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி..!