அடுக்குமாடி குடியிருப்பில் தூங்கிக் கொண்டிருந்த நபரிடம் பெண் வேடமிட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பிக் பாஸ் பிரபலமும், விசிக பிரமுகருமான விக்ரமன் கையும் களவுமாக சிக்கியதாக தகவல்கள் வெளியானது. சென்னை, ஐயப்பன் தாங்கல் பகுதியில் கேட்டேடு கம்யூனிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜூ முருகன் குடும்பத்தோடு வசித்து வருகிறார். அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பாலியல் குற்றங்கள் நிகழ்வாகவும், பராமரிப்புக்குத்தான் முன் தொகை அளிக்க முடியாது என தெரிவித்ததால் குடியிருப்பு சங்க நிர்வாகிகள் மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் இயக்குனர் ராஜூ முருகனின் மனைவி புகார் அளித்தார்.
இந்நிலையில் இயக்குனரின் மனைவி கேள்வி எழுப்பியது தொடர்பான விபரங்களும், வீடியோ காட்சிகளும் வெளியாகின. அதில் 2024 ஆம் ஆண்டு மே மாதம் வரை வசித்து வந்த பிக் பாஸ் பிரபலமும், விசிக பிரமுகரான விக்ரமன் அதிகாலை இரண்டு மணி அளவில் பெண் வேடமிட்டு அடுக்குமாடி குடியிருப்பில் தூங்கிக் கொண்டிருந்த 23 வயது ஆண் ஊழியரிடம் பாலியல் ரீதியாக தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அந்த நபர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். தொடர்ந்து இரவில் பெண் வேடமிட்டு விக்ரமன் சுத்திய நிலையில் முதலில் விக்ரமணி பெண் என நினைத்திருக்கிறார்கள்.

தொடர்ச்சியாக அந்த ஊழியர் தொந்தரவு செய்யப்பட்டதால் சக ஊழியர்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் மறைந்திருந்து அவரை பிடித்த போது அவர் பெண் அல்ல, அவர் விக்ரமன் என்பதும் தெரியவந்தது. பிடிபட்டவர் அரசியல்வாதி என்பதாலும், பிரபலம் என்பதாலும் அவரை தனி இடத்திற்கு சென்று அழைத்துச் சென்று போலீசாருக்கு தகவல் கூறாமல் இரவோடு, இரவாக அவரை அங்கிருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது. விக்ரமன் பிடிபட்டபோது வீடியோ எடுத்தவர்களை விரட்டி, அவற்றை அளித்ததாகவும், அதற்காக பெரும் தொகையும் விக்ரமணியிடம் வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இதனை மறுத்துள்ள விக்ரமனும், அவரது மனைவியும், இதனை மறுத்துள்ளனர். ''படப்பிடிப்புக்காக எடுக்கப்பட்ட வீடியோவை அவதூறாக பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விக்ரமன் மற்றும் அவரது மனைவியுடன் வந்து போரூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், ''ஷூட்டிங் தொடர்பாக வீடியோ ஒன்று நாங்கள் எடுக்க வேண்டிய வந்தது. நான் வெளியூரில் இருந்தபோது சூட்டிங்கிற்காக எடுத்த அந்த வீடியோவை தேவையில்லாமல் வேறு வகையில் திசை திருப்பி அவதூறு பரப்பும் விதமாக நடந்து கொண்டுள்ளார்கள்.
அது தொடர்பாக நாங்கள் புகார் தெரிவித்துள்ளோம். அவதூறு பரப்பியதாகச் சொன்னதை பலரும் புரிந்து கொண்டனர். காவல்துறையினர் எங்களது புகாரை எடுத்துக் கொண்டுள்ளனர்'' தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: லேடி கெட்டப் போட்டு இரவில் விசிக நிர்வாகி சில்மிஷம்..! இயக்குநரின் மனைவிக்கு டார்க்கெட்..!