டப்பாடி பழனிசாமியின் வலதுகரமாக, பக்கபலமாக இருந்த இருவர் தங்கமணி, எஸ்.பிவேலுமணி. நககமும் சதையுமாக இருந்தவர்கள். சகாக்களாக இருந்து எடப்பாடியாரின் சகலமும் அறிந்தவர்கள். அப்படிப்பட்ட மூவருக்குள்ளும் முட்டிக் கொண்டது என்கிற தகவல் அதிமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தங்கமணி ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழ்ழவில் கலந்து கொள்ளவில்லை. எடப்பாடி பழனிசாமி எஸ்.பி.வேலுமணி மகனின் திருமணத்தில் பங்கேற்கவில்லை. இரண்டு மணியானவர்களும் செங்கோட்டையனுடன் கைகோர்த்து உள்ளடி அரசியல் செய்து வருவதாக எதிர்கட்சிகளும் அலசி ஆராய்ந்து வருகின்றன.
ஆனால், இந்த மூவருக்குள்ளும் நடக்கும் ரகசிய மோதலை அறிந்த அதிமுகவின் கொங்கு மண்டலப் புள்ளிகள், '‘எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணிக்கு இடையே இந்த வில்லங்கமான விளையாட்டை ஆடிக் கொண்டிருப்பவர் தவெக விஜய்தான் என்கிறார்கள்.
விஜய் தரப்பினருடன் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் ரகசியமாக கூட்டணி பேச்சுவார்த்தைகளை சில மாதங்களாகவே நடத்தி வருகிறார். இது கட்சியின் சீனியர்களான செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட யாருக்கும் பிடிக்கவில்லை.
இதையும் படிங்க: வாட் ப்ரோ...இது ராங்க் ப்ரோ... விஜய்யை கலாய்த்த ப்ளூ சாட்டை மாறன்!!
இரட்டைத் தலைமையில் பிரச்சினை, குழப்பம் என்றுதான் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமியை முன் நிறுத்தினோம். ஆனால், எடப்பாடியாரோ, தன்னை ஜெயலலிதாவாக நினைத்துக் கொண்டு தன்னை சுற்றி இரும்புக் கேட்டை போட்டுக் கொண்டு உருப்படாத சில விஷயங்களை செய்து கொண்டு இருக்கிறார்.

நேற்று கட்சி ஆரம்பித்த விஜய்யோடு, மாபெரும் இயக்கமான அதிமுக இறங்கி போய் பேச வேண்டிய அவசியம் என்ன? அதுவும் விஜய் தரப்பில் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்கிறார்கள். இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி கேட்கிறார்கள். விஜய் கட்சிக்கு அதிகபட்சமாக 50 தொகுதிகள் கொடுத்தால் கூட அதிகம்தான். அந்தத் தொகுதிகளிலும் திமுக எளிதாக வெற்றி பெற்று விடும். அவர் கட்சியில் அனுபவமில்லாத, தொகுதிக்கு பரிட்சயமற்ற வேட்பாளர்களைத்தான் போட்டியிட வைப்பார்கள்.

தவெகவுக்கு கட்சி கட்டமைப்பு இருக்கிறதா? பூத் ஏஜெண்ட்டுகள் இருக்கிறார்களா? இப்போது விஜய் இப்படி அதிமுகவிடம் கறார் காட்டுவதற்குக் காரணம், அதிமுக பிரிந்து கிடப்பதாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் மாயைதான். அதனால் ஓ.பி.எஸ், சசிகலா உள்ளிட்டோரை எல்லாம் இணைத்து அதிமுகவை ஒற்றுமையான கட்சியாக்கி, 2021 போல தேசிய ஜனநாயக கூட்டணியை மீண்டும் உருவாக்கலாம். 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் ஒரு சில சதவிகித வாக்குகள்தான் வித்தியாசத்தில்தான் வெற்றி, தோல்விகள் அமைந்தது. எனவே வலிமையான கட்சியையும், வலிமையான கூட்டணியையும் வைத்திருந்தால் விஜய் எல்லாம் நம்மை ஏன் சீண்டிப் பார்க்கிறார்?’ என வேலுமணி வெளிப்படையாகவே தனது ஆதரவாளர்களிடம் பேசி வருகிறார்.’ இதெல்லாம் அறிந்துதான் எடப்பாடி சற்று நெருடலோடு இருக்கிறார்.

எஸ்.பி.வேலுமணி, தங்கமணி தரப்பினரின் அழுத்தத்துக்கு சாதகமான பதில் தரும் வகையில்தான் மார்ச் 4 ஆம் தேதி சேலத்தில், ‘திமுகதான் எங்கள் ஒரே எதிரி’ என்று பேட்டியளித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. மார்ச் 10 ஆம் தேதி எடப்பாடி கோவை கொடிசியாவுக்கு எஸ்.பி.வேலுமணி மகன் வரவேற்புக்கு வருவார். அதன் பின்னர் இதற்கெல்லாம் ஒரு முடிவு காணப்படும்'' என்கிறார்கள் கொங்கும் மண்டல அதிமுகவினர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நாடகமாடுவது பாஜக-வா..? திமுக-வா..? அதிகாலையில் பரபரக்க வைத்த விஜயின் கடிதம்..!