"அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் என்பது சில்லித்தனமான வேலை. அவருக்கும் திமுகவுக்கும் சம்பந்தமில்லை." என்கிறார் திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன். ஆனால் ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர்தான் என ஆதாரத்தை காட்டுகின்றன எதிர்கட்சிகள்.
‘‘கள்ளச்சாராய வியாபாரி கண்ணுக்குட்டியின் கதவு ஸ்டிக்கரிலும், வன்கொடுமை குற்றவாளி ஞானசேகரன் வண்டி நிறத்திலும் வாழ்கிறது திராவிடம்’’என வெளுத்து வாங்குகின்றன எதிர் கட்சி முகாம்.
இந்நிலையில், அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட வழக்கில் கைதான ஞானசேகரன், மேலும் ஒரு மாணவியிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: பலாத்காரம் செய்யும் முன் மாணவிக்கு ஞானசேகரன் கொடுத்த 3 ஆப்சன்... வெளிவந்த கோர முகம்.. புதருக்குள் நடந்தது என்ன?
பாதிக்கப்பட்ட மாணவியிடம் நடத்திய விசாரணையில், அவரது தோழி ஒருவரையும் ஞானசேகரன் பாலியல் சீண்டல் செய்துள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளனர். ஞானசேகரனின் செல்போனில் தகவல்கள் அழிக்கப்பட்ட நிலையில் அதனை ரெக்கவரி செய்ததில் 5 ஆபாச வீடியோக்கள் இருப்பதும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி ஒருவர் கடந்த 23 ஆம் தேதி ஒரு கட்டடத்திற்கு பின்புறம் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த ஒருவர் மாணவியின் ஆண் நண்பரை மிரட்டி விரட்டியடித்துவிட்டு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கோட்டூபுரத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகாரளித்தார். அந்த மாணவி சொன்ன அங்க அடையாளங்களை வைத்து கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து எஃப் ஐ ஆரில் அந்த மாணவி கூறியுள்ள தகவல் பகீர் ரகம்.‘‘செல்போனில் இருந்த தந்தையின் எண்ணை எடுத்து வீடியோவவை அவருக்கு அனுப்பப்போகிறேன் என ஞானசேகரன் மிரட்டினார்.
மாணவியுடன் காதலன் பேசிக்கொண்டிருந்த வீடியோவை டீன், மற்றும் பேராசிரியர்களிடம் காண்பிக்கப்போவதாகவும் மிரட்டினார். வீடியோவைக் காண்பித்தால் உங்கள் இருவரையும் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கிவிடுவார்கள் எனவும் மிரட்டினார். தன்னை மிரட்டியபோது ஞானசேகரனுக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அதில் சம்பவம் குறித்து ஞாசேகரன் ஒருவைடம் விவரித்ததாகவும் மாணவி கூறியுள்ளார்.
பெற்றோர், பல்கலைக்கழக நிர்வாகத்திடம் வீடியோவை காட்டட்டுமா? இல்லையென்றால் என்னோடு ஒத்துழைக்க வேண்டும். போனில் பேசும் சாருடன் உடன் ஒத்துழைக்க வேண்டும் என மிரட்டியுள்ளார். ஆண் நண்பரை மிரட்டி விரட்டிவிட்ட பின், மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் ஞானசேகரன்.
வீடுபுகுந்து கொள்ளை அடிக்கும்போது அங்குள்ள பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்வது ஞானசேகரனின் வழக்கம். ஞானசேகரனின் இந்தக் குற்றப்பின்னணியை அறிந்து சந்தேகத்தின் பேரில் பிடித்து 24ம் தேதியே போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். போலீஸார் விசாரணைக்கு அழைத்ததால் காவல் நிலையம் செல்லும்போது செல்போனில் ஆதாரங்களை அழித்துவிட்டு சென்றுள்ளார்.
அப்போது நடந்த விசாரணையின்போது தான் ஏதும் செய்யவில்லை என மறுத்ததால் எழுதி வாங்கிக்கொண்டு ஞானசேகரனை போலீசார் அனுப்பியதாக கூறப்படுகிறது. சிசிடிவி, செல்போன் சிக்னல், ஆடைகளை வைத்து மீண்டும் ஞானசேகரனை சந்தேக வளையத்திற்குள் போலீஸார் கொண்டு வந்தனர். அறிவியல்பூர்வ ஆதாரங்களை வைத்து ஞானசேகரன்தான் குற்றவாளி என்பதை உறுதி செய்து மீண்டும் பிடித்துள்ளனர்.
ஞானசேகரனின் செல்போனை பறிமுதல் செய்து சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி வீடியோக்களை போலீஸார் ரெகவரி செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் தனக்கு மாதவிடாய் என்று கெஞ்சியும் அத்துமீறிய திமுக மாணவர் அணி அமைப்பாளர் ஞானசேகரன் விடவில்லை’’ எனத் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், இந்த பலாத்கார விவகாரம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. ‘‘ஞானசேகர் முகநூல் பக்கம் ஏன் அவசர அவசரமாக முடக்கப்பட்டது? ஞானசேகரன் வீட்டிற்கு சென்ற காவல்துறை ஞானசேகருக்கும் திமுகவிற்கும் உள்ள தொடர்பை அழித்தது ஏன்?
கவர்னர் மாளிகை அருகே இருக்கும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிசிடிவிகள் எப்படி பழுதாகும்? குற்றச் செயலில் ஈடுபட்ட கொடூரர்களில் ஒருவனை மட்டும் கைது செய்துவிட்டு மற்றவர்களின் விவரத்தை வெளியிடாமல் ரகசியம் கற்பது ஏன் ? யார் அந்த சார்?’’ என சந்தேகங்கள் அடுக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: பலாத்காரம் செய்யும் முன் மாணவிக்கு ஞானசேகரன் கொடுத்த 3 ஆப்சன்... வெளிவந்த கோர முகம்.. புதருக்குள் நடந்தது என்ன?