ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரம், சர்வ அமாவாசை தினத்தில் சுவாமியின் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். அதன்படி நிகழாண்டில் திங்கள்கிழமை ஆஞ்சனேய ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதிகாலை 5 மணிக்கு ஒரு லட்சத்து 8 எண்ணிக்கையிலான வடை மாலை சாத்தப்பட்டு சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
மேலும், நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர் .
இதையும் படிங்க: சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தான ... மின்னொளியில் ஜொலிக்கும் கண்ணாடி பாலம்
இதையும் படிங்க: Laptop வாங்கப்போறீங்களா..? இதெல்லாம் செக் பண்ணாம வாங்காதீங்க