பாமரன் செத்தான்... பணக்காரன் பெற்றான் என்கிற நிலைமையில் இருக்கிறது இன்றைய ஆட்சியின் நிலைமை.
பாப்கார்ன் முதல் பயன்படுத்திய கார் வரை... நடுத்தர வர்க்கம் மீண்டும் ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 55வது கூட்டம் ஜெய்சால்மரில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. தற்போதைய தகவலின்படி, 50%க்கும் அதிகமான சாம்பலைக் கொண்டிருக்கும் ஆட்டோகிளேவ்டு ஏரேட்டட் கான்கிரீட் (பேவர் பிளாக்) 18%க்குப் பதிலாக 12% ஜிஎஸ்டி விதிக்கப்படும்.
செறிவூட்டப்பட்ட அரிசியின் வரிகளை எளிதாக்கும் வகையில், வீடு, ஹோட்டல் என எந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டாலும், அதற்கு 5% ஜிஎஸ்டி விதிக்க கவுன்சில் முடிவு செய்துள்ளது. சாப்பிட தயாரக உள்ள பாப்கார்ன் மீதான வரி விகிதங்கள் தொடர்பான முழு விவரங்களும் வெளியாகியுள்ளன. சாதாரண உப்பு, மசாலாப் பொருட்களுடன் தயாரிக்கப்பட்ட பாப்கார்ன், பேக்கேஜ் செய்து லேபிளிடப்படாவிட்டால், 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும்.
இதையும் படிங்க: அம்பேத்கரை மையம் கொண்ட பாஜக- காங்கிரஸ் அரசியல்... அபகரிப்பால் குமுறும் தலித் கட்சிகள்... பின்னணி என்ன?
பேக்கேஜ் செய்து லேபிளிடப்பட்டிருந்தால், இந்த விகிதம் 12% ஆக இருக்கும். சர்க்கரையில் இருந்து தயாரிக்கப்படும் பாப்கார்ன் "சர்க்கரை மிட்டாய்" பிரிவில் வைக்கப்பட்டுள்ளது அதற்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.
எலெக்ட்ரிக் வாகனங்கள் உட்பட பழைய பயன்படுத்திய வாகனங்களின் விற்பனை மீதான ஜிஎஸ்டி வரி 12%லிருந்து 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு உண்டான இன்சூரன்ஸ் விவகாரங்களில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் குழு (ஜிஓஎம்) கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படாததால், மேல் மட்ட விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கவுன்சில் 148 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி விகிதங்களை மறுபரிசீலனை செய்யப்பட உள்ளன. கைக்கடிகாரங்கள், பேனாக்கள், காலணிகள், ஆடைகள் போன்ற ஆடம்பரப் பொருட்களுக்கான வரியை அதிகரிப்பதற்கான ஆலோசனையும் நடைபெற்று வருகிறது.
இது தவிர, கோவில்களுக்கு பூஜை செய்யும் பாவ, புன்னிய பொருட்களுக்கு தனி 35% வரி குறித்தும் அறிவிப்பு வெளியாகலாம். ஸ்விக்கி, ஜோமோட்டோ போன்ற உணவு விநியோக தளங்களுக்கான வரி விகிதத்தை 18% லிருந்து 5% ஆக குறைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘உன் காதலி எனக்கு... என் மனைவி உனக்கு’ நட்பு, காதல், செக்ஸ்... கேவலமான விளையாட்டில் சிக்கிய இளைஞர்கள்