கோவா முன்னாள் எம்.எல்.ஏ லாவூ மம்லேதரின் (69) வேலை நிமித்தமாக கர்நாடகா சென்றார். கர்நாடகா மாநிலம் பெலகாவியின் காதே பஜார் அருகே கோவா முன்னாள் எம்.எல்.ஏ கார் ஒரு ஆட்டோ மீது மோதியது. நிவாஸ் லாட்ஜுக்கு லாவூ மம்லேதர் சென்றபோது அவரது கார் ஆட்டோ மீது மோதியதால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் முன்னாள் எம்.எல்.ஏவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார், ஒரு கட்டத்தில் மோதல் முற்றி லாட்ஜ் வாசலிலேயே முன்னாள் எம்.எல்.ஏவை ஆட்டோ ஓட்டுநர் தாக்கினார்.


பின்னர் அங்குள்ளவர்கள் தடுத்து முன்னாள் எம்.எல்.ஏவை மீட்டு அனுப்பி வைத்தனர். அவர் லாட்ஜ் உள்ளே சென்றார். படிகட்டு ஏறும் இடத்தில் மயங்கி விழுந்து பலியானார். லாட்ஜின் சிசிடிவி கேமராவில் தாக்குதல் சம்பவம் பதிவாகியிருந்தது. தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பஜார் போலீசார் உயிரிழந்த கோவா முன்னாள் எம்.எல்.ஏ லாவூ மம்லேதரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, அவரைத் தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: சிறுவனின் அடிப்பட்ட கன்னம்.. தையலுக்கு பதில் பெவிகால்..! இது கர்நாடக கொடூரம்

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த லாவூ மம்லேதர் 2012 முதல் 2017 வரை கோவாவின் பான்டா சட்டப்பேரவை தொகுதியில் மகாராஷ்டிராவாடி கோமந்தக கட்சியின் சார்பில் எம்.எல்.ஏவாக இருந்தார். அரசியலில் நுழையும் முன் போலீஸ் டிஎஸ்பியாக பணியாற்றிவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உச்ச நீதிமன்றம் நிர்ணயத்தபடி, காவிரி நீர் வரத்தை கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும்: ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்