கன்னியாகுமரி மாவட்டம் காந்தி மண்டபத்திற்கு தினந்தோறும் ஏராளமான மக்கள்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக்கை இரண்டு பேர் திருடி சென்றனர். திருடி செல்வதை சுதாரித்துக் கொண்ட பொதுமக்கள் பைக்கை திருடி சென்ற நபர்களை துரத்தியுள்ளனர். அப்போது திருடர்கள் குண்டல் என்ற பகுதிக்கு சென்ற போது பைக்கில் பெட்ரோல் தீர்ந்துள்ளது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திருடர்கள் பைக்கை பாதியிலேயே நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். முன்னதாக பைக்கை விட்டு செல்ல மனம் இல்லாத திருடர்கள் பெட்ரோல் பங்க் சென்று உள்ளனர்.

அப்போது அங்கு காத்திருந்த மக்கள் இருவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து கன்னியாகுமரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வரை இந்த போலீசார் திருடர்களை கைது செய்தனர். அப்போது இது குறித்து போலீஸ் அறிவிசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் நாகர்கோவில் மேலராமன் புதூரை சேர்ந்த ஜவகர் ஆண்டனி பிரகாஷ் என தெரிய வந்தது. தொடர்ந்து இதுபோன்ற இருவரும் வேற ஏதேனும் திருட்டுகளில் ஈடுபட்டுள்ளனரா என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்..!
இதையும் படிங்க: காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்.. ஐந்து பேரை லாபகமாக பிடித்த போலீஸ்..