மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்று கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு வருகை தருகிறார். அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு ஒரு மாத காலமாகவே கோயம்புத்தூர் மாவட்ட பாஜகவினர் அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
அமித்ஷா வருகை ஒட்டி கோவையில் பாஜகவினர் வைத்திருந்த பேனர்கள் மற்றும் பிளக்ஸுகளை கோவை மாநகராட்சி முன்னறிவிப்பின்றி அகற்றியது, இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் அவிநாசி சாலை, பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டதால் கோவை மாநகரம் ஸ்தம்பித்தது.
ஏற்கனவே தமிழகத்தில் ஆளும் திமுக விற்கும் பாஜகவிற்கும் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. பாஜக தலைவர் அண்ணாமலையும் திமுக இளைஞரணி செயலாளர் உதயணியும் கடுமையான வார்த்தைகளை கொண்டு ஒருவருக்கொருவர் விமர்சித்தும் வருகின்றனர்.
இதையும் படிங்க: இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா..! போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கோவை மாநகரம்.!

மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவும், அதேபோன்று தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் தான் மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார். கோவை பீளமேடு மற்றும் அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள பாரதிய ஜனதா மாவட்ட அலுவலக கட்டிடங்களை அமித்ஷா திறந்து வைக்கிறார்.
பின்னர் கட்சியினருடன் கலந்துரையாடிவிட்டு ஈஷா யோகா மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகா சிவராத்திரி விழாவில் அமித்ஷா கலந்து கொள்கிறார்.

அமித் ஷாவின் இந்த திட்டமிட்ட நிகழ்ச்சிக்கு விமான நிலையத்திலிருந்து அவர் தங்கும் நட்சத்திர ஹோட்டல், அங்கிருந்து பீளமேடு பாஜக அலுவலகம் அவிநாசி சாலையில் உள்ள புதிய அலுவலகம் அதன் தொடர்ச்சியாக தொண்டாமுத்தூர் வழியாக செல்லும் ஈஷா யோகா மையம் ஆகிய அனைத்து பகுதிகளிலும் பாஜகவினர் ஏராளமான பேனர்கள், பிளக்ஸ் பதாகைகள், கொடிகள் என தூள் கிளப்பி இருந்தனர்.
இந்த நிலையில் தான் பீளமேடு பகுதியில் பாஜக புதிய அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்கு அருகே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் அனுமதி இல்லாமல் பேனர்கள் எப்படி வைத்தீர்கள் என கோவை காவல்துறையினர் பாஜகவினரிடம் கேள்வி எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்து அனைத்து பதாகைகள் மற்றும் பிளக்ஸ் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன, மாநகராட்சி ஊழியர்கள் அங்கிருந்த கொடிகள் மற்றும் படங்களை அருகிலுள்ள குப்பை தொட்டியில் கொண்டு போய் போட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் பீளமேடு காவல் நிலையம் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அது மட்டும் இன்றி கோவை அவிநாசி பிரதான சாலையில் உள்ள பீளமேடு காவல் நிலைய முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான பாஜகவினர் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் கோவையின் பிரதான சாலையான அவிநாசி சாலை மற்றும் பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
ஏற்கனவே கடந்த முறை அமித்ஷா சென்னை வரும் போது விமான நிலையத்திலிருந்து தங்கும் விடுதி வரை மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது நினைவு இருக்கலாம்.
இதையும் படிங்க: 26ஆம் தேதி அமித்ஷா, அண்ணாமலை சந்திப்பு..! கோவையில் முக்கிய ஆலோசனை..!