ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை பாஜக அரசு இதுவரை ஒதுக்கவில்லை. நடப்பாண்டில் ஒதுக்க வேண்டிய 2 ஆயிரத்து 152 கோடி ரூபாயை இதுவரை மத்திய பாஜக அரசு விடுவிக்கப்படவில்லை. பி.எம்.ஸ்ரீ. திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்துட்டால் மட்டுமே நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் சேர்ந்தால், தேசியக் கல்விக் கொள்கையையும், மும்மொழி கொள்கையையும் ஏற்றுக் கொண்டதாக ஆகிவிடும் என்பதனால் தமிழக அரசு இதுவரை அந்தத் திட்டத்தில் இணையவில்லை.
இதையும் படிங்க: திமுக ஒரு திட்டத்தை எதிர்த்தால் அது சூப்பர்ன்னு அர்த்தம்.. மக்களுக்கு பாடம் எடுத்த ஹெச்.ராஜா!
நடப்பாண்டு நிதியை வழங்கிட தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும் வரை நிதி விடுவிக்கப்பட மாட்டாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

எதுவாயினும் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிப்பட கூறியுள்ளார். மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பா.ஜ.க.வின் கலை, கலாச்சாரப் பிரிவு மாநில செயலாளர் ரஞ்சனா நாச்சியார் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தமிழகம் வேறு, தாயகம் வேறு என்பதைப் போல மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பாஜக செயல்படுவதாக அதிருப்தி தெரிவித்துள்ளார். மும்மொழி கொள்கை தினப்பு, திராவிட வெறுப்பு, தமிழகம் புறக்கணிப்பு உள்ளிட்ட காரணங்களால் பாஜகவில் இருந்து தான் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அனுமதியில்லாமல் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்குவீங்களா..? முறியடிப்போம் என வைகோ ஆவேசம்.!