அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பைக் கிளப்பியது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன் என்ற நபரை கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் நீதி வேண்டும் என்றும், வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

மாணவி விவகாரத்தில் நீதி கேட்டு பாஜக மகளிர் அணி சார்பில் நேற்று பேரணி நடைபெறவிருந்தது. மதுரையில் இருந்து தொடங்கப்பட்ட பேரணி, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம் வழியாக சென்று சென்னையை அடைய திட்டமிடப்பட்டிருந்தது. சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் முக்கிய நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து மனு அளிக்க திட்டமிட்டிருந்தனர்.
இதையும் படிங்க: அடிப்படை கொள்கை மீறி திமுகவுடன் 8 ஆண்டுகள் கூட்டணி...மாநில மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் ஒப்புதல்...தொண்டர்கள் சரமாரி கேள்வி...

ஆனால் இந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், மதுரையில் பேரணியை தொடங்க முயன்ற குஷ்பு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பெண்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் சந்தேகிக்கின்றனர். இதனால் இந்த விவகாரத்தை ஆளுநர் ஆர்.என்.ரவியின் கவனத்திற்கு கொண்டு செல்ல பாஜக திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக இன்று மாலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் சந்திக்கவுள்ளனர். வானதி சீனிவாசன், குஷ்பூ, மாநில மகளிர் அணி தலைவர் உமாரதிராஜன் ஆகியோர் ஆளுநரைச் சந்தித்து மனு அளிக்கவுள்ளனர்.
இதையும் படிங்க: கே.டி.ராகவன் விவகாரமும் இதுவும் ஒன்றா? ஜோதிமணி கவனமாக பேசணும்… குஷ்பூ ஆவேசம்...