நுழைவுச் சீட்டுகள் முதலில் ஜனவரி 2ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால், பின்னர் 7ம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதன்படி இன்று எந்த நேரமும் நுழைவுச் சீட்டுகள் வெளியாகலாம்.
கேட் தேர்வு என்றால் என்ன..?
கேட் தேர்வுகள் என்பது பொறியியல், அறிவியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை, உள்ளிட்ட பிரிவுகளில் இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலை பட்டமேற்படிப்பு, முனைவர் ஆகியவற்றை பயில தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வாகும். பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புப் பெறுவதற்கு இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்று, பட்டப்படிப்பு படித்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். கேட் நுழைவுத் தேர்வு கணனி மூலம் நடத்தப்படும் தேர்வாகும், இதை ஐஐடி ரூர்கே நடத்துகிறது.பெங்களூருவில் உள்ள ஐஐஎஸ்சி, மும்பை, டெல்லி, குவஹாட்டி, கான்பூர், காரக்பூர், சென்னை, ரூர்கே ஆகிய இடங்களில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்கள் இந்தத் தேர்வை நடத்துகின்றன.

ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது..?
கேட் நுழைவுத் தேர்வு யாரெல்லாம் விண்ணப்பத்துள்ளார்களோ அந்த மாணவர்கள் தங்களின் நுழைவு சீட்டை gate2025.iitr.ac.in என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்யலாம்.
நுழைவுச்சீட்டில்(அட்மிட் கார்டு) தேர்வு எழுதுவோரின் பெயர், அடையாள எண், தேர்வு மையம், தேர்வு நாள், நேரம், பேப்பர் கோட் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அதில் அடங்கி இருக்கும்.

கேட் தேர்வு எப்போது..?
2025ம் ஆண்டுக்கான கேட் நுழைவுத் தேர்வுகள் பிப்ரவரி மாதம் 4 நாட்கள் நடத்தப்பட உள்ளன. பிப்ரவரி 1 மற்றும் 2 தேதிகளிலும், 15 மற்றும் 16ம் தேதிகளிலும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்தத் தேர்வுகள் இரு பிரிவுகளாக அதாவது காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணிவரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை ஒரு பிரிவாகவும் தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு நுழைவுச்சீட்டு கண்டிப்பாக தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேசிய கீதத்தை அவமதித்ததே ஆளுநர் தான்..அவருக்கு மட்டும் தான் தேச பக்தி இருக்கா..? கொந்தளித்த அமைச்சர் சிவசங்கர் ..!
எவ்வாறு நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வது..?
முதலில் மாணவர்கள் கேட் தேர்வின் அதிகாரபூர்வ இணையதளமான gate2025.iitr.ac.in. என்ற தளத்துக்கு செல்ல வேண்டும்.
அந்த இணையதளத்தில் “டவுன்லோடு கேட் 2025 அட்மிட் கார்டு” என்ற பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
மாணவர்கள் தங்களுக்குரிய பதிவு செய்யப்பட்ட ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்தபின் மாணவர்கள் அதில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் பெயர், புகைப்படம், கையொப்பம், தேர்வு மையம், தேதி, நேரம் ஆகிய சரியானதா என்பதை சரிபார்க்க வேண்டும். ஏதாவது சந்தேகம், அல்லது தவறுகள் இருந்தால் உடனடியாக கேட் தேர்வு குழுவினரை அணுகலாம்.
இதையும் படிங்க: 2025 புதுவருடத்தில் புது மொபைல் வாங்க ஆசையா..பெஸ்ட் கேமரா மொபைல் லிஸ்ட் இதோ ..!