திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள மேல குன்னத்தூர் பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 10க்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள் படித்து வருகின்றனர். இந்த மையத்தில் பணியாற்றும் ஊழியர் பிரேமா வழக்கம் போல இன்று காலை மையத்தை திறக்க வந்தார். அப்போது மையத்தின் வாசலில் மனித கழிவு மற்றும் மது பாட்டில்கள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பள்ளி சிறுவர்கள் படிக்கும் இடத்தில் இப்படிப்பட்ட காரியத்தை செய்தவர்கள் யார் என எண்ணி கலங்கி உள்ளார். இருந்தாலும் மாணவர்களுக்கு இதனால் தொற்று எதுவும் ஏற்படக்கூடாது என நினைத்த பிரேமா, தானே அந்த அசுத்தத்தை சுத்தப்படுத்த துவங்கினார்.

மனித மலத்தை அவரே அகற்றிவிட்டு அங்கு ப்ளீச்சிங் பவுடர் தூவினார். மேலும் அங்கு சிதறி கிடந்த மது பாட்டிலின் துகள்களையும் கூட்டி அப்புறப்படுத்தினார். அதற்குள் இந்த விவகாரம் கிராமம் முழுதும் பரவியது. இதனால் அங்கன்வாடிக்கு தங்களது குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுத்துவிட்டனர். 10க்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர் பயிலும் அந்த அங்கன்வாடியில் இன்று இரண்டு குழந்தைகள் மட்டுமே வந்தனர். குழந்தைகளின் அடிப்படை ஆரம்ப கல்வியையே பாதிக்கும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 100 பெண்களுடன் 'டேட்டிங்'..! ரூ.3 கோடி சுருட்டிய 'காதல் மன்னன்' கைது..!

இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மனித மலம், அங்கன்வாடி முன்பாக இருந்தது தொடர்பாகவும் மது பாட்டில்கள் உடைக்கப்பட்டது தொடர்பாகவும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதுபோன்று சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர். அடிக்கடி சமூக விரோதிகள் சிலர், அங்கன்வாடி மையத்தின் முன்பாக மனித மலத்தை கழித்து விட்டு செல்வதாகவும், குழந்தைகளை இந்த அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்படுத்துவதாகவும் பெற்றோர் கூறினர். இந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் மாலை நேரங்களிலேயே இந்த பகுதியில் மது குடித்துவிட்டு இதுபோன்ற மனித மனத்தை கழித்து விட்டு செல்வதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: ஓசியில குல்ஃபி ஐஸ் தரமாட்டியா? வடமாநில சிறுவனை தாக்கிய ரவுடிகள்.. பித்தளை மணியால் தலையில் தாக்கி அராஜகம்!