பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா பகுதியில் இருக்கும் தெற்கு வாரிஸ்தானில் ஒரு மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் மாவட்ட ஜமாத் உலமா அல் இஸ்லாம் தலைவர் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்ட காவல் அதிகாரி ஆசிப் பகாதர் அளித்த பேட்டியில் “ஆசம் வாரக் பைபாஸ் சாலையில் உள்ள மவுலானா அப்துல் அஜிஸ் மசூதியில் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு சக்திவாய்ந்த ஐஇடி வெடிகுண்டுகள் வெடித்தது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் மாவட்ட ஜேயுஐ தலைவர் அப்துல்லா நதீம் தீவிர காயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளார், மற்ற 3 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
இதையும் படிங்க: ரயில் கடத்தல் பின்னணியில் இந்தியா..? புழுகினி பாகிஸ்தானின் அழுகினி ஆட்டம்..!
காயமைடைந்தவர்கள் ரஹ்மான்னுல்லா, முல்லா நூர், ஷா பேரன் ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். போலீஸார் குண்டு வெடித்த இடத்துக்கு விரைந்து தடயங்களை சேகரித்து, விசாரணை நடத்தி வருகிறார்கள் எனத் தெரிவித்தார்.

பக்துன்கவா பகுதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு மசூதிகளில் அதிகமான மக்கள் வருவார்கள். இதைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் வெடிகுண்டு தாக்குதலை அடிக்கடி நிகழ்த்துவார்கள்.
2023, ஜனவரி 30ம் தேதி பெஷாவரில் ஒரு மசூதியில் வெடிகுண்டு வெடித்ததில் 59 பேர் கொல்லப்பட்டனர், 157 பேர் காயமடைந்தனர். பெஷாவரில் நடந்த குண்டுவெடிப்பின்போது தொழுகையில் இருந்தது பெரும்பாலும் போலீஸார், குண்டு வெடித்ததும் சுவர் இடிந்து விழுந்தது. முதலில் உயிரிழப்பு குறைவாக இருந்த நிலையில் மறுநாள் 101 ஆக அதிகரித்தது.

2022ம் ஆண்டிலும் இதேபோன்று மசூதிக்குள்ளே மனித வெடிகுண்டு கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. மனித வெடிகுண்டாக வந்தவர் முதலில் வாயிலில் இருந்த போலீஸாரை கொலை செய்துவிட்டு, பின்னர் மசூதியில் இருந்த தொழுகை கூடத்துக்குள் வந்து தன்னை வெடிக்கச் செய்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தினார். இந்தத் தாக்குதலில் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களில் ஏராளமானோர் காயமடைந்தனர், அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரயில் கடத்தலுக்கு பழி: கோபத்தில் பாகிஸ்தானின் மூக்கை உடைத்த தலிபான்கள்..!