நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்தாரா? அவருடன் எடுத்த போட்டோ எடிட்டிங் செய்யப்பட்டதா? என்று விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சீமான், பிரபாகரனை சந்திக்கவில்லை. அவருடன் எடுத்த போட்டோவை எடிட் செய்து கொடுத்தது நான் தான் என்று இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கிளப்பிய புயல் தான் சில வாரங்களாக தமிழக அரசியலில் புயலாக மையம் கொண்டிருக்கிறது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள சீமான் போலி என்பதற்கான ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம் என சவால் விட்டு வருகிறார்.இந்நிலையில், சங்ககிரி ராஜ்குமாரின் பேச்சுக்கு வலு சேர்க்கும் வகையில், ஒளிப்பதிவாளர் சந்தோஷை அழைத்து பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சி நேர்காணல் நடத்தியது. அதில், சீமான்-பிரபாகரன் தொடர்புகள் குறித்துல தகவல்களை தெரிவித்து இருந்தார் சந்தோஷ்.

ஆனால், சந்தோஷ் சொல்வது அனைத்துமே பொய் என்கிறார் சீமான் தரவாளர் வ.கீரா. இதுகுறித்து அவர், ''ஒளிப்பதிவாளர் சந்தோசின் பேச்சை முழுமையாக கேட்க நேர்ந்தது.2008 ல் ஈழம் செல்லும் பொழுது சீமான் ஒரு ஆளே கிடையாது என்கிறார். ஈழத்தில் இவரை யாருக்கும் தெரியாது என்றும் சொல்கிறார்.
இதையும் படிங்க: 'அடிச்ச அடில எல்லோரும் போட்டோவை தூக்கிட்டு திரியுறாங்க.... சோளி முடிஞ்சது..!' ட்ராக் மாறும் சீமான் அரசியல்..?
தலைவர் பிரபாகரன் அன்போடு எல்லோராலும் "தம்பி " என்றும் அழைக்கப்படுவார். அவரது அந்த தம்பியை ஒட்டி சீமான் மிகப்பெரிய வெற்றிப் படமாக "தம்பி" வெளியாகி சக்கை போடு போட்டது. அதே காலத்தில் பாமக தலைவர் ராமதாஸ், திருமா உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் ஒருங்கிணைத்த "தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில்" இயக்குனர் தங்கர் பச்சனோடு அவரும் வீரியமாக செயல்பட்டார். அப்பொழுதே தமிழக தலைவர்கள் மட்டத்திலும் அறியப்பட்டவர்தான் சீமான். சீமான் நன்கு அறியப்பட்டதினால் மட்டுமே பள்ளிக்கூடம் படப்பிடிப்பில் நடிகராகவும் நடித்தார்.

அதோடு ஈழம் செல்லும் வாய்ப்பு கிட்டியபொழுது பெரிய சம்பளத்துடன் வாழ்த்துக்கள் என்னும் படத்தை இயக்கி கொண்டிருந்தார் சீமான். சந்தோஷ் அப்பொழுது ஒரு ஒளிப்பதிவாளராக கெட்டவன் திரைப்படத்தின் இயக்குனர் நந்து எடுக்க தொடங்கிய "எல்லாளன் "படத்தில் பணி புரிய மட்டுமே சென்றார். ஆனால், போகிற போக்கில் ''சீமானுக்கு படம் எடுக்க தெரியவில்லை. நானும் ஏற்கனவே பயிற்சி பெற்ற புலிகள் அமைப்பினரும் தான் படத்தை எடுத்தோம்'' என்றும் கூறுகிறார். அடிப்படையில் இவருமே அப்போது புதியவர்தான். அவரின் கூற்றுப் படி பார்த்தால் ஒரு குறும்பட ஒளிப்பதிவாளராக இருந்திருக்கிறார். விளம்பர படம் நாளைந்து எடுத்தவன் என்கிறார்.
ஈழத்தில் சீமான் 13 நாட்கள் தங்கி இருந்ததை ஒத்துக்கொள்ளும் சந்தோஷ்,எல்லாளன் படத்தையும் ஒரு நாள் இயக்கியத்தையும் குறிப்பிடுகிறார். அங்கிருந்த பதிமூன்று நாளில் 3 நாட்கள் படப்பிடிப்பு தளத்துக்கு வந்ததையும், அதில் ஒரு நாள் படப்பிடிப்பை சீமான் நடத்தியத்தையும் ஒத்துக்கொள்ள முடிந்த சந்தோஷால் மீதி 10 நாட்கள் சீமான் தங்களுடன் இல்லை என்பதையும் ஏற்றுக் கொள்கிறார். அந்த பத்து நாட்களும் யாருடன் சீமான் பேசிக்கொண்டிருந்தார் என்பதையெல்லாம் கவனிப்பதா ஒரு ஒளிப்பதிவாளர் வேலை..? உங்களை விட நன்கு அறியப்பட்ட அவரை யாருக்கும் தெரியாது என்பது, எவ்வளவு பொய்யோ.. இதுவும் பொய்.
ஆமைக்கறி நான்கு முறை சாப்பிட்டதாகச் சொல்கிறார் சந்தோஷ்.எந்த சூழ்நிலையிலும் புலிகள் விருந்தோம்பலில் உச்சமாக இருப்பார்கள்.நன்கு கவனிப்பார்கள். தலைவரின் "ஷெப் " இந்த வார்த்தையை பயன்படுத்துகிறீர். தலைவரின் செப் மூலம் ஆமைக்கறி சாப்பிட்ட நீங்கள் சீமான் நீங்கள் இல்லாத பொழுது ஆமைக்கரி சாப்பிட்டிருக்க மாட்டாரா..? அல்லது கூடாதா..? உடும்புக்கறி சாப்பிட்டதை ஒத்துக்கொள்கிற நீங்கள் அதைக் குறித்து மட்டும் மழுப்புவது ஏன்?
உங்கள் படப்பிடிப்பு தளத்தில் சீமான் துப்பாகியுடன் நிற்கும் படத்தை நீங்கள் எடுத்தீர்கள்.நல்ல வேளை அது ஈழத்தில் தான் எடுக்கப்பட்டது என்பதை ஒத்துக்கொண்டதற்கு...தலைவருடன் படம் எடுத்தது குறித்து..? சந்தோஷின் பொய்களில் இருந்து சில உண்மைகளும் கிடைத்து விடுகின்றன. அதில் சீமானும்,
தலைவரும் சந்தித்து படம் எடுக்கும் அன்று படப்பிடிப்பையே ரத்து செய்து விட்டு படம் எடுக்க போனோம் என்பது உங்கள் வாயில் இருந்தே வந்து விட்டது. படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு சீமானை படம் பிடிக்க போனதில் இருந்தே அங்கே முக்கியமானவராக இருந்திருக்கிறார் தெரிகிறது.

எப்போதும் புகைப்பட போஸ் கொடுப்பது என்பது 8 நிமிடங்கள் தான் இருக்கும். அதை விட கூடுதலாக எடுத்துக்கொண்டால் நீங்கள் ஒளிப்பதிவு செய்யவே தகுதி அற்றவர் ஆகி விடும். அதை வீடியோவாகவும் எடுத்து வைத்து இன்றளவும் கொடுக்காமல் பிழைப்பதும் பிழைப்பு தானே..!
மற்ற எல்லாமே 15 ஆண்டுகளுக்கு பிறகு சந்தோஷின் பெரியார் போபியாவால் சிலதை சீமான் மீது தூற்றுவதும்..ஏசுவதும் அவருக்கு சிலர் இட்ட மொழி என்பது பொதுவானவர்கள் கண்டு கொள்வார்கள்.உங்கள் வாயிலிருந்து அண்ணன் சீமான் படம் மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டது வரை ஒப்புக்கொண்டதற்கு நன்றி. இனியாவது அவரவர் கதைகளை விட்டு விட்டு வேறு இன்னும் சிலரையும் முடிந்தவரை ஒரே மாதிரி சொல்ல அழைத்து வாருங்கள்.
2009 க்கு பிறகு ஃபேஸ்புக், யூடியூப் இன்னப்பிற சமூக வலைத்தளங்களில் கூட புலிகளை குறித்து ஒரு செய்தியும் படமும் இடம்பெறாமல் போனாலும் தமிழகம், உலக நாடுகள் முழுக்க தலைவர் தினம் தினம் பேசுப்பொருளாக இருக்க அண்ணன் சீமானும் நாம் தமிழருமே காரணம். தமிழ் தேசியக் களத்தில் சீமான் இன்னும் பிளிரட்டும் ...
திருப்பி அடிப்போம்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'சீமான்- பிரபாகரன் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதில்லை..!' ரகசியத்தை உடைத்த புகைப்பட தடயவியல் நிபுணர்..!