சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் இரண்டாம் பகுதியாக இன்று இரவு 10 மணிக்கு அமெரிக்காவிலிருந்து அமிர்தசரஸ் வந்தடையும். அமெரிக்காவிலிருந்து அமிர்தசரஸ் வரும் இந்த ராணுவ விமானத்தில் 119 இந்தியர்கள் இருப்பார்கள். அவர்கள் அமெரிக்காவிலிருந்து வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்படுகிறார்கள். அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் 119 சட்டவிரோத இந்திய குடியேறிகளில், அதிகபட்சமாக 67 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். இரண்டாவது இடத்தில் ஹரியானா உள்ளது. ஹரியானாவைச் சேர்ந்த 33 பேர் இதில் அடங்குவர்.
இது தவிர, 8 பேர் குஜராத்தையும், 3 பேர் உத்தரபிரதேசத்தையும், தலா 2 பேர் கோவா, மகாராஷ்டிரா, ராஜஸ்தானையும், தலா 1 பேர் இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீரையும் சேர்ந்தவர்கள். இந்த விமானம் இன்று இரவு 10 மணியளவில் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, அங்கிருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்களின் இரண்டாவது பகுதியாகும். இந்த மாத தொடக்கத்தில், 104 சட்டவிரோத குடியேறிகள் கொண்ட ஒரு குழு அமிர்தசரஸை வந்தடைந்தது.
இதையும் படிங்க: 12 வயது சிறுவர்களுடன் செ***ஸ்.. 35 வயது நல்லாசிரியையின் லீலைகள்.. 30 வருட ஜெயில் தண்டனை
இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படுவது இது முதல் முறையல்ல. அமெரிக்கா இதற்கு முன்பும் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தி வருகிறது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சியினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் கைவிலங்குகளாலும், கால்களில் சங்கிலியாலும் கட்டப்பட்டு சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டதாக குற்றம் சாட்டுகள் எழுந்தன. இது குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டியிருந்தது. வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில், இந்த செயல்முறை புதியதல்ல. இது முன்பும் நடந்துள்ளது எனக் கூறி அவர் ஒவ்வொரு ஆண்டிற்கான தரவுகளையும் எடுத்து முன் வைத்தார்.

அமெரிக்காவில் வசிக்கும் சட்டவிரோத குடியேறிகளை இந்தியா ஏற்றுக்கொள்ளும் என்று பிரதமர் மோடி தெளிவாகக் கூறியுள்ளார். இது வெறும் இந்தியாவைச் சேர்ந்த பிரச்சினை மட்டுமல்ல. இது ஒரு உலகளாவிய பிரச்சனை. மற்ற நாடுகளில் சட்டவிரோதமாக வசிக்கும் மக்களுக்கு அங்கு வாழ சட்டப்பூர்வ உரிமை இல்லை. சட்டவிரோத குடியேறிகளை திரும்பப் பெற நாங்கள் தயாராக உள்ளோம்'' எனக் கூறி இருந்தார் .
அதே நேரத்தில், சட்டவிரோத குடியேறிகள் நாடு திரும்புவது குறித்து, ''பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மத்திய அரசு பஞ்சாபை அவதூறு செய்வதாகவும், அமெரிக்க குடியேறிகளை ஏற்றி வரும் விமானத்தை பஞ்சாபில் தரையிறக்குவது தவறு என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: சிறு நீரில் குளியல்... ஷாக் ட்ரீட்மெண்ட்.. சித்திரவதை... ஆன்மாவை உலுக்கும் அமெரிக்காவிலிருந்து திரும்பியவரின் கதை..!