அன்று, ஆம்பளைங்க யாரும் இல்லையா? என்று கேட்டு சர்ச்சையைக் கிளப்பிய அதே பாமக எம்.எல்.ஏ அருள் இன்று, பெண்ணின் காலை பிடித்து பள்ளியை மூடாதீங்கம்மா எனக் கெஞ்சியுள்ளார்.
சேலம், மாவட்டத்தில் இருக்கும் பாமக எம்எல்ஏவுக்கும், சர்ச்சைகளுக்கும் அப்படி ஒரு பொருத்தம். ஆனால் ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொண்டால் அதை மறக்கடிக்கும் வகையில் மற்றொரு சம்பவத்தை நிகழ்த்தி விடுவதிலும் அவர் கில்லாடி என்கிறார்கள். இப்படித்தான் சமீபத்தில் ஒரு சமூகத்திற்கு பாத்தியப்பட்ட சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டியில் அங்காளம்மன், பெரியாண்டிச்சி அம்மன் கோயில் பிரச்னைக்கு தீர்வு காண வாலண்டரியா ஸ்பாட்டுக்கு போனார் எம்எல்ஏ அருள். அப்போது அந்த பகுதி தாய்க்குலங்கள் அதிகளவில் திரண்டு அவரிடம் முறையிட வந்தார்கள்.

அப்போது எம்எல்ஏ அருள், இரு தரப்பும் சமாதானமாகி கோயில் திறக்க ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதில், ஒரு தரப்பில் பெண்கள் மட்டுமே பேசியுள்ளனர். எம்எல்ஏ அருள் குறுக்கிட்டு, "உங்கள் தரப்பில் ஆம்பளைங்க எவரும் இல்லையா? முக்கியஸ்தர்கள், ஆண்கள் இல்லாமல் எப்படி உறுதியான முடிவை எடுப்பது. உங்கள் தரப்பு ஆண்களை வரச்சொல்லுங்கள்," என்று பேசிய வீடியோ வைரலானது.
இதையும் படிங்க: 10.5% விட அதிகம் அனுபவிக்கும் வன்னியர்கள்... 15% ஆக உயர்த்தி திமுகவுக்கு நெருக்கடி... அன்புமணியை ஆட்டி வைக்கும் டேட்டா..!
அவர் ஆண்கள் குறித்து கேள்வி கேட்டது சர்ச்சையின் உச்சமாகவும் மாறிப்போனது. எதிர்ப்புகள் வலுக்கவே, சமூக வலைதளங்களில் இதுதொடர்பாக தனது விளக்கத்தையும் நீண்டநேரம் பதிவு செய்திருந்தார் அருள். தொகுதி மக்களிடையே ஏற்பட்ட இந்த பிரச்னைய மறக்கடிக்க என்ன செய்யலாம்? என அவர் தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தபோதுதான் லட்டாக சிக்கியது அந்த சம்பவம்.
தனியார் பள்ளி ஒன்றை அதனை நிர்வாகம் செய்கிறவர்கள் விற்று விட்டதால் மூடப்போவதாக தகவல் வந்து சேர்ந்தது. இந்த விஷயத்தை கையெலெடுத்து கறையை துடைக்க முடிவு செய்தார் அருள். உடனடியா தனது அடிப்பொடிகள் மூலமாக ஆட்களை திரட்டியுள்ளார். நேற்றுமுன்தினம் ஆதரவாளர்களுடன் அங்கே பேசப்போயுள்ளார் அருள் எம்எல்ஏ.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் பள்ளி நிர்வாகியான தாய்க்குலத்தின் காலில் பொத்தென விழுந்துவிட்டார். ‘‘அம்மா வேண்டாம்மா, ஸ்கூலை மூடாதீங்கம்மா என்று கண்ணீர் வடித்தபடி கெஞ்சிய வீடியோ வைரலானது. ஒன்றல்ல, இரண்டு முறை இப்படி அவர் காலில் விழுந்தது சமூக வலைதளங்களில் வைரலாகி அவர் மீது அனுதாபத்தை ஏற்படுத்தி விட்டது. ஏற்கனவே தாய்க்குலங்கள் மத்தியில் இருந்த டேமேஜை மற்றொரு தாய்க்குலத்தின் காலில் விழுந்து எப்படி துடைச்சாரு பாத்தீங்களா நம்ம ஆளு என்று புல்லரித்துப் போய்க் கிடக்கிறார்கள் பாமக நிர்வாகிகள்.
இதையும் படிங்க: பள்ளியை மூடாதீங்க மா.. காலில் விழுந்து கெஞ்சிய பா.ம.க MLA..