பாகிஸ்தானில், பலூச் விடுதலைப் படை பிரிவினைவாதிகள் குவெட்டாவிலிருந்து கைபர் பக்துன்க்வாவுக்குச் சென்று கொண்டிருந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்தினர். இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தினர் 140 பேர் அந்த ரயிலில் பயணம் செய்தனர். பயணிகள் உட்பட மொத்தம் 500 பேரை பலூச் விடுதலைப் படை பணயக் கதைகளாக்கி உள்ளது. இந்தியாவிலும் பல ரயில் கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவங்கள் பீகார், வங்காளத்தில் மாவோயிஸ்டுகளால் நடத்தப்பட்டன.

பாகிஸ்தானில் நடந்த இந்த ரயில் கடத்தல் சம்பவத்தை போன்ற காட்சிகள் ஷாருக்கான் நடித்த பிளாக்பஸ்டர் படமான ஜவானில் இடம்பெற்றுள்ளது. ஜவானில், ஷாருக்கான் முழு மெட்ரோ ரயிலையும் கடத்துவார். அந்த கதாபாத்திரத்தில் ஷாருக் தனது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக மெட்ரோவை கடத்துவார். அவர் யாரையும் கொல்லவில்லை என்றாலும், மெட்ரோவில் பயணித்த மக்களின் முகங்களில் பயம் தெளிவாகக் காணப்பட்டது.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் 500 பயணிகளுடன் ரயில் ஹைஜாக்... அதிரவைத்த பலூச் கிளர்ச்சிப் படை...!
திரைப்படங்களி காட்டப்படும் ரயில் கடத்தல் கதைகள் வெறும் கற்பனை அல்ல. இன்று பாகிஸ்தானில் ரயில் கடத்தல் சம்பவம் நடந்திருப்பது போல, இந்தியாவிலும் இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்பு பல முறை நடந்துள்ளன.

2006 ஆம் ஆண்டு, டாடாநகர்-காரக்பூர் ரயிலை 25-30 மாவோயிஸ்டுகள் கொண்ட குழு கடத்தியது. அந்த இடம்- மேற்கு வங்கம்- ஜார்க்கண்ட் எல்லை. பயணிகளிடமிருந்து ரூ.1 லட்சத்தை மாவோயிஸ்டுகள் கொள்ளையடித்தனர்.
இதேபோல், 2009 ஆம் ஆண்டு, ஜார்க்கண்டின் லதேஹரில் கோமோ-முகல்சராய் பேடிஎம் ரயில் கடத்தப்பட்டது. இந்த ரயிலில் 700 பயணிகள் இருந்தனர். இந்த சம்பவம் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வெளியானது.

அதே ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி, மேற்கு வங்காளத்தின் மிட்னாபூரில் மாவோயிஸ்டுகள் ராஜ்தானி எக்ஸ்பிரஸைக் கடத்தினர். ரயில் சுமார் 5 மணி நேரம் நின்றது. 2017 ஆம் ஆண்டில் இரண்டு ரயில் கடத்தல் சம்பவங்கள் நடந்தன. ஜமுய் என்ற இடத்தில் தன்பாத்-பாட்னா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலையும், லக்கிசராய் என்ற இடத்தில் டானாபூர்-துர்க் எக்ஸ்பிரஸ் ரயிலையும் மாவோயிஸ்டுகள் கடத்தினர்.

பாகிஸ்தானில் நடந்த ரயில் கடத்தல் சம்பவத்திற்கு பிரிவினைவாத அமைப்பான பலூச் விடுதலை படை பொறுப்பேற்றுள்ளது. தென்மேற்கு பாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான பயணிகளை ஏற்றிச் சென்ற பயணிகள் ரயில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் சுமார் 400 பயணிகள் உள்ளனர். பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டாவிலிருந்து கைபர் பக்துன்க்வாவில் உள்ள பெஷாவருக்கு இந்த ரயில் சென்று கொண்டிருந்தது.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக மும்முனைத் தாக்குதல்: பாகிஸ்தான்- வங்கதேசத்துடன் சேர்ந்து அடித்து ஆடும் சீனா..!