நடப்பதையெல்லாம் பார்த்தால்.. இது நாடகம் போல தெரிகிறது. திமுகவில் இருந்து விலகி தவெகவுடன் விசிக கூட்டணி சேர.. திருமா & விஜய் முன்பே பேசி வைத்திருக்க வேண்டும்எனறே தோன்றுகிறது என சந்தேகம் கிளப்பி வருகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
நேற்று விஜயை சந்திப்பதற்குமுன்பே விசிக தலைவர் திருமாவளவன் ஆதவ் ஆர்ஜூனாவுக்கு வாழ்த்து சொன்னார். அப்போது, ''ஆதவ் அர்ஜுன், விஜய் அவர்களுடைய கட்சியில் சேர்ந்து இயங்கப் போகிறார் என்பது மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். அவர் மீது விசிகவில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருந்தோம். ஆறு மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்திருந்தோம். அவர் கட்சி இருந்து விலகுவதாக கடிதம் எழுதினார். ஆகவே அவராகவே விலகினார் என்பதுதான் நிஜம். ஒழுங்கு நடவடிக்கைக்கு முன்பு வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்கள் இயல்பாக இருப்பதுண்டு. அதேபோல அவருக்கு சில வழிகளை தந்தும் அதை அவர் மீறினார் என்பதுதான் ஒழுங்கு நடவடிக்கைக்கான காரணம். நடிகர் விஜய் அவர்களை அர்ஜுன் சந்தித்தார் என்பது உண்மை.

எப்படி இருந்தாலும் அவர் விஜய் அவர்களோடு இணைந்து இயங்கப் போகிறார் என்பது மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்... தேர்தல் வியூகங்களை வகுக்கவும், கட்சியில் அடிப்படை உறுப்பினர்களை இணைக்கவும் அவரக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த காலத்தில் இருந்தே பொறுப்புணர்வோடு செயல்பட்டார். எல்லோருடனும் இணக்கமாகவும் இருந்தார். தலைமையின் மீதும், கட்சியின் மீதும் விசுவாசத்தோடு செயல்பட்டார் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. பொதுவாக நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதற்கு உள்ளானவர்கள் உரிய விளக்கத்தை தந்து அந்த விளக்கத்திற்கு பின்னர் கட்சியில் இணைய முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆனால், அர்ஜுன் அவர்கள் உடனடியாக கட்சிய விட்டு விலகினார். இது ஒரு எதிர்பாராத நிகழ்வுதான்'' என ஆதவ் அர்ஜூனுக்காக வருத்தப்பட்டுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
இதையும் படிங்க: விஜய் கட்சியில் ஆதவ்… உடனே விசிக வைத்த ஒரே கோரிக்கை… இளம் சிறுத்தைகளை ஈர்க்கும் யானை..!

ஆதவ் அர்ஜூனா தவெகவில் இணைந்தது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள விசிக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, ''மரியாதைஇக்குரிய ஆதவ் அர்ஜூனா அவர்கள் தவெகவில் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளராக பொறுப்பேற்று இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் எங்கிருந்தாலும் தனது களப்பணியை சிறப்பாக செய்வார் என நான் நம்புகின்றேன்.னென்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அவர் துணைப்பொது செயலாளராக இருந்தபோது அவரது களப்பணியும் சிறப்பாகவே இருந்தது'' என வாழ்த்தினார் திருமாவளவன். விஜயையை ஆதவ் சந்திக்கப்போவதாகவே ஆரூடங்கள் கூறப்பட்ட நிலையில், திருமா எப்படி வாழ்த்துச் சொன்னார் என்கிற சந்தேகம் எழுப்பினர் அரசியல் பார்வையாளர்கள். அவர் வாழ்த்திய சில மணி நேரங்களிலேயே விஜயுடன் ஆதவ் சந்திப்பு நடந்தது.
அடுத்து இன்று விஜயை சந்தித்து ஆதவுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே ஆதவ் அர்ஜூனா தவெகவில் இணைந்தது குறித்து கருத்துத் தெரிவித்த விசிக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, ''மரியாதைக்குரிய ஆதவ் அர்ஜூனா அவர்கள் தவெகவில் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளராக பொறுப்பேற்று இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் எங்கிருந்தாலும் தனது களப்பணியை சிறப்பாக செய்வார் என நான் நம்புகின்றேன்.ஏனென்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அவர் துணைப்பொது செயலாளராக இருந்தபோது அவரது களப்பணியும் சிறப்பாகவே இருந்தது…

இங்கே இருந்தபோது தலித் முதல்வராக வேண்டும் என்கிற கோரிக்கையை அவர் வலுவாக வைத்தார். அதே கோரிக்கையை தமிழக வெற்றிக் கழகத்திலும் அவர் எழுப்புவார் என நான் நம்புகின்றேன். ஏனென்றால் தலித் முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கையைத் தான் அவர் வலுவாக வைத்திருந்தார். அதே கோரிக்கையை தவெகவிலும் தேர்தல் களத்தில் முன் வைப்பார் என நான் நம்புகிறேன். அது அவரது கோட்பாடு என்று சொல்லி இருந்தார். ஆகவே அவர் அதைச் செய்வார் என நம்புகிறேன்'' என வன்னியரசு கேட்டுக் கொண்டார். அப்படியானால், விசிகவை கூட்டணிக்கு அழைத்து தவெக கூட்டணியில் திருமாவை முதல்வராக்க முன் மொழியச் சொல்கிறாரா வன்னியரசு என்கிற கோணத்திலும் பார்க்கப்பட்டது.
இந்நிலையில், நடப்பதையெல்லாம் பார்த்தால்.. இது நாடகம் போல தெரிகிறது. திமுகவில் இருந்து விலகி தவெகவுடன் விசிக கூட்டணி சேர.. திருமா & விஜய் முன்பே பேசி வைத்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது என்கிற சந்தேகத்தை கிளப்பி இருக்கிறார் சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன். அவர் தனது எக்ஸ்தளப் பதிவில்,'ஆதவ் அர்ஜூனாவின் அம்பேத்கர் நூலை வெளியிட நேரடியாக விஜய்யை அழைக்க மாட்டாராம் விகடன் மூலம் அழைப்பாராம். அதில், திருமா பங்கேற்றால் திமுகவிற்கு தர்மசங்கடம் ஏற்படும் என்பதால்.. போகாமல் தவிர்ப்பாராம்.

தலித் ஒருவரை முதல்வராக வேண்டுமென திருமா நினைப்பதை மேடையில் ஆதவ் பேசுவாராம். ஆதவ் சஸ்பென்ட் செய்யப்படுவாராம்.திமுக அரசை திருமா விமர்சிக்க ஆரம்பிப்பாராம். தவெகவில் ஆதவ் இணைவாராம். ஆதவ்விற்கு வாழ்த்து சொல்வார்களாம். கடைசியில் தேர்தல் வரும்போது தவெகவுடன் கூட்டணிவைத்து கொள்வார்களாம். ஆத்தாடி...எவ்வளவு கஷ்டப்பட்டு முறுக்கு பிழியறாங்க பாருங்க'' என பெரும் சந்தேகம் கிளப்பியுள்ளார் ப்ளூசட்டை மாறன். சிறுத்தையும், யானைய காட்டில் ஒன்றாக வாழுபோது, சிறுத்தை சின்னம், யானை சின்னம் கட்சியும் கூட்டணி அமைக்கக் கூடாதா? என விசிக ஆதரவாளர்கள் கமெண்டில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
இதையும் படிங்க: சூடு கிளப்பும் தவெக… இணைந்த அன்றே ஆதவ்-நிர்மலுக்கு முக்கியப்பதவி… காளியம்மாள் இடத்தை தட்டிச்சென்ற யூடியூபர்..!