இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த அழைப்பை இஸ்லாமபாத் வானிலை மையம் ஏற்றுக்கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க உறுதியளித்துள்ளது. ஆனால், வங்கதேசத்திடம் இருந்து இதுவரை உறுதியளிப்பு வரவில்லை.
அண்டை நாடுகளுடன் வேறுபாட்டை மறந்து, ஒதுக்கிவைத்து, நிகழ்ச்சியைக் கொண்டாட மத்திய அரசு முதல்முறையாக நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான், மியான்மர், மாலத்தீவுகள், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய ஆசிய நாடுகளுக்கும், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், மத்திய மற்றும் தென்மேற்கு ஆசிய நாடுகளுக்கும் இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ “பரிக்கப்படாத இந்தியா” நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியா விடுத்த அழைப்பை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டு பங்கேற்பதாக உறுதியளித்துள்ளது. இது வரலாற்று சிறப்பான நிகழ்ச்சி. ஆனால், வங்கதேசத்திடம் இருந்து பதில் இல்லை. அனைத்து நாடுகளின் அதிகாரிகளின் பதிலுக்காக காத்திருக்கிறோம். பிரிக்கப்படாத இந்தியா இருந்தபோது ருந்த அனைத்து நாடுகளின் பங்கேற்பையும் எதிர்பார்க்கிறோம். இந்த நிகழ்ச்சி வரலாற்று சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு அமைச்சகங்களும் பங்களிப்பு செய்கிறார்கள். நிதியமைச்சகம் சார்பில் ரூ.150 நாணயம் இந்த நிகழ்ச்சிக்காக வெளியிடப்படுகிறது, குடியரசு தினவிழா அணிவகுப்பில் 150வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் டேப்ளு வைக்க மத்திய உள்துறை அனுமதியளித்துள்ளது” எனத் தெரிவித்தார்.

சிறிய வரலாறு
இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 1875ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி தொடங்கப்பட்டது. முதன்முதலாக பிரிட்டிஷ் கிழக்கு இந்தியா கம்பெனியால் முதன்முதலாக வானிலை மையம் தொடங்கப்பட்டது. கொல்கத்தா வானிலை மையம் 1785லும், சென்னை வானிலை மையம் 1796லும், பாம்பே வானிலை மையம் 1826லும் கிழக்கு இந்திய நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏராளமான வானிலை மையங்கள் தொடங்கப்பட்டன.
1866 மற்றும் 1871ல் மேற்கு வங்கம் முழுவதும் கொடுமையான பஞ்சம் வாட்டியது, அதைத் தொடர்ந்து, 1864ம் ஆண்டு கொல்கத்தாவை மோசமான புயல் தாக்கியதைத் தொடர்ந்து, 1875ல் இந்திய வானிலை ஆய்வு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சியில் வானிலை மையம் தேவை, புள்ளிவிவரங்களை ஆய்வு செய்யவும், வானிலையை முன்கூட்டியே கணிக்கவும், எச்சரிக்கவும் ஆய்வு மையம் தேவையைக் கருத்தில்கொண்டு இந்திய வானிலை ஆய்வு மையம் தொடங்கப்பட்டது.
இதையும் படிங்க: விடை பெறும் காங்கிரஸ்! 50 ஆண்டுகளுக்குப்பின் அக்பர் சாலையிலிருந்து கோட்லா சாலைக்கு மாற்றம்..
நாடுமுழுவதும் வானிலை, பருவநிலை, காலநிலை தொடர்பான அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டு, இந்திய வானிலை மையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. இதையடுத்து, 1875ம் ஆண்டு இந்திய வானிலை ஆய்வு மையம் உருவாக்கப்பட்டு, கொல்கத்தா தலைமையிடமாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1905ம் ஆண்டு ஷிம்லாவுக்கு மாற்றப்பட்டு, பின்னர் 1928ம் ஆண்டில் புனேவுக்கும், 1944ம் ஆண்டு புது டெல்லிக்கும் மாற்றப்பட்டு தொடர்ந்து அங்கு செயல்படுகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் அமைதியாகத் தொடங்கப்பட்டு தற்போது ஆசியாவிலேயே முன்னணி ஆய்வு மையமாக இருந்து வருகிறது. சுதந்திரம் பெற்றபின், இந்திய வானிலை மையத்தின் செயல்பாட்டிலும், வானிலையை கணிப்பதிலும், தகவல் தொடர்பிலும், அறிவியல் கண்டுபிடிப்பிலும் முன்னேற்றம் அடைந்தது.
தந்தி முறை புழக்கத்தில் இருந்தபோது, முக்கியமான வானிலை தொடர்புகளை தந்தி மூலம் உடனுக்குடன் அனுப்பியது, எச்சரிக்கை செய்தது. வானிலை மற்றும் மழை, புயல் தொடர்பான எச்சரிக்கைகளை உடனுக்குடன் அனுப்ப தந்தி முறைதான் முன்னணியாக இருந்தது.
இதையும் படிங்க: இந்தியா கற்றுக் கொடுத்த சர்ஜிக்கல் பாடம்... ஆப்கானிஸ்தானை பழிவாங்கும் பாகிஸ்தான்..!