அம்பேத்கர் குறித்து அனைவரும் பேசுவதற்கு காரணம் விஜய் தான் என தவெக கொள்கை பரப்பு இணை செயலாளர் தாஹிரா தெரிவித்துள்ளார் . வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதியில் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 200க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர் . தமிழக வெற்றி கழக மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் தாஹிரா மற்றும் வேலூர் மாவட்ட பொறுப்பாளர் நவீன் ஆகியோர் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் தவெகவில் இணைந்தனர் .
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளிடம் பேசிய மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் தாஹிரா
2026 ஆம் ஆண்டு தவெக ஆட்சிக்கு வர மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர் , மற்றவர்கள் செய்ய முடியாததை விஜய் செய்வார் என்று நம்பிக்கை பொதுமக்களுடைய வந்துள்ளது என்கிறார் .விஜய் மக்களை சந்திப்பதற்கான அறிவிப்பு மாநில பொதுச் செயலாளர் விரைவில் அறிவிப்பார் என்றும் எல்லா மேடைகளிலும் எல்லா அமைச்சர்களும் அம்பேத்கர் குறித்து பேசுகிறார்கள் என்றால் அது விஜய் பேசிய பேச்சால் தான் என்றும் தெரிவித்தார் .
மேலும் அம்பேத்கர் பொதுவான தலைவர் என்பதை விஜய் தான் முன்னிறுத்தி உள்ளார் , எங்கள் கொள்கை தலைவராக அம்பேத்கரை ஏற்றுக் கொண்டது எங்களுக்கு பெருமையாக உள்ளது எனவும் தாஹிரா தெரிவித்துள்ளார்
இதையும் படிங்க: விலை உயர்ந்த கார்கள் அழியாமைக்கான தங்கச் சீட்டா..? முகத்தில் சிரிக்கும் அதிர்ஷ்டம்... இந்திய சாலைகளின் அவலம்..!