உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா குறித்து தவறான உள்நோக்கத்தைக் கற்பிக்கும் வகையில் கருத்துக்களைப் பரப்பிய 140 சமூக ஊடகங்கள் மீது 13 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து மகா கும்பமேளாவின் காவல் டிஜஜி வைபவ் கிருஷ்ணா இந்த 140 சமூக ஊடகங்கள மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தார். மேலும் வரும் 26ம் தேதி நடக்கும் மகா சிவராத்திக்கு தேவையான வசதிகளையும் போலீஸார் செய்து வருகிறார்கள் எனவும் தெரிவித்தார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்துக்களின் மகா கும்பமேளா புனித திருவிழா உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் நடந்து வருகிறது. இங்குள்ள கங்கை,யமுனை நதிகள் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், சாதுக்கள், அகோரிகள் புனித நீராடுகிறார்கள்.

கடந்த ஜனவரி 13ம் தேதி முதல் இதுவரை திரிவேணி சங்கமத்தில் 62.50 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக உ.பி. அரசு தெரிவித்துள்ளது. இந்த மகா கும்பமேளா காலத்தில் இங்குள்ள திரிவேணி சங்கத்தில் புனித நீராடினால் பாவங்கள் தொலையும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக பக்தர்கள், ரயில்கள், கார், பேருந்துகளில் பிரயாக்ராஜ் வந்தவாறு இருக்கிறார்கள். இங்கு வரும் அனைவரின் நோக்கம் இங்கு வந்து நதியில் புனித நீராட வேண்டும் இல்லாவிட்டால் 144 ஆண்டுகளுக்குப்பின்புதான் இந்த மகா கும்பமேளாவை சந்திக்க நேரிடும் என்பதால் கூட்டம் அலைபாய்கிறது. கும்பமேளாவில் நடக்கும் இந்துக்கள் விழா, கூட்டம் ஆகியவை குறித்து சமூக ஊடகங்களில் ஆதாரத்துக்கு புறம்பான வகையில், மக்களைக் குழப்பும் வகையில் பல செய்திகள் உலாவருகின்றன.
இதையும் படிங்க: ரயில் மூலம் திரும்ப முடியாமல் தவித்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள்.. உதவிக்கரம் நீட்டிய உதயநிதி..

இதைக் கண்டுபிடித்து தடுக்கும் பணியில் உ.பி. போலீஸார் தனியாக சைபர் பிரிவு ஏற்படுத்தியுள்ளனர்.
அது குறித்து கும்பமேளா காவல் டிஐஜி வைபவ் கிருஷ்ணன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ மகா கும்பமேளா குறித்து ஆதாரமற்ற, பொய்யான தவறான உள்நோக்கத்தை கற்பிக்கும் வகையில் பொய்யான செய்திகளை பரப்பிய 180 சமூக ஊடகங்கள் மீது 13 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதிக்கு நடக்கும் மகா சிவராத்திரி விழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். எந்த விதமான போக்குவரத்து நெரிசலும் இல்லாத வகையில் பாதையை மாற்றி அமைத்துள்ளோம். அநைத்து வகையான ஏற்பாடுகள் திட்டமிட்டவகையில் சிறப்பாகச் செல்கின்றன, கூட்டம் எவ்வளவு வந்தாலும் அதைத் திறம்பட சமாளிப்போம்” எனத் தெரிவித்தார்.

கடந்த வாரம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள அயோத்யா தாம் ரயில் நிலையத்தில் கூட்டம் கட்டுங்காதவகையில் வந்தது. இந்த முறை சிவராத்ரிக்கு அதுபோன்று கூட்டம் வராமல் தடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து காவல் துணைக் கண்காணிப்பாளர் யஷ்வந்த் சிங் கூறுகையில் “ ரயில்கள் வரும்போதுதான் பக்தர்கள் நடைமேடைக்கு செல்ல முடியும். கும்பமேளாவில் புனித நீராடுதல் குறித்தும், மகா சிவராத்ரிக்கு வரும் கூட்டம் குறித்து எச்சரிக்கையாக இருக்கிறோம். 350 போலீஸார் காவலுக்கு வைத்துள்ளோம், தடுப்புகள் அமைத்து, ரயிலில் செல்லும் பயணிகள், ரயிலில் இருந்து வரும் பயணிகள் ஆகியவற்றைப் பிரிப்போம். ரயில் நிலையத்துக்குள் எத்தனை பயணிகள் இருக்க முடியுமோ அந்த அளவுக்க மட்டும்தான் அனுமதிப்போம். ரயில் நிலையத்துக்குள் தேவையற்ற பயணிகள் செல்ல அனுமதிக்கமாட்டோம் என்பதில் விழிப்பாக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்
இதையும் படிங்க: ‘டிஜிட்டல் ஸ்நானமாம்’! எப்படியெல்லாம் சம்பாதிக்கிறாங்க பாருங்க! கும்பமேளாவில் இப்படியும் மோசடி