வேலூர் மாவட்டம் எடைத்தெரு கிராமத்தை சேர்ந்தவர் முருகன்- செல்வி தம்பதியினரின் 17 வயதான இளைய மகள் அண்மையில் 12-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் துணி துவைத்து வீட்டின் அருகே உள்ள இடத்தில் காய போட சென்ருள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த கட்டுவிரியன் பாம்பு ஒன்று சிறுமியின் காலில் கடித்துள்ளது.

இதனை அடுத்து வலியால் துடித்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் சிறிது நேரத்திலேயே சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோரும், உறவினர்களும் உடனடியாக சிறுமியை தூக்கிக் கொண்டு மராட்டியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: அரசு பேருந்து - கார் மோதி விபத்து.. 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்னதாகவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக சிறுமியின் உடலை உடற்கூராய்விற்கு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். வேலூரில் 17 வயது சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மருத்துவ வசதி கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: செல்வப்பெருந்தகையுடன் கூட்டு..? சவுக்கு மேட்டரின் பரபரப்பு ஆடியோ..! சேகர்பாபுவிடம் பேசிய ரௌடி எங்கே..?