திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போல் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூபாய் 2500 வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

உணவு பொருள் வழங்கல் துறை சார்பிலான மானிய கோரிக்கை இன்று நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் இந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசியிருந்தார்கள். அதனைத் தொடர்ந்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வரும் செப்டம்பர் மாதம் முதல் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையில் கூறியவாறு நெல் குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும் அதை விட கூடுதலாக வழங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: வாலிபர் வெட்டி படுகொலை.. சம்பவ இடத்தில் போலீசார் குவிப்பு.. நெல்லையில் பரபரப்பு..!

திமுகனுடைய தேர்தல் அறிக்கை 2021-ல் குவிண்டாலுக்கு 2,500 ரூபாயும், கரும்புக்கு 3000 ரூபாயும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல சிறிது சிறிதாக அந்த தொகையினுடைய அளவு உயர்த்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த மானியக் கோரிக்கையின் போது பதிலுரை அளித்த அமைச்சர் சக்கரபாணி விவசாயிகளுக்கு இப்படியொரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். தேர்தல் அறிக்கையில் கூறியவாறு நெல் குவிண்டாலுக்கு வரும் செப்டம்பர் மாதம் முதல் 2500 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு விவசாய பெருமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தங்கக்கட்டிகள் வழிப்பறி வழக்கு.. போலீஸ் தேடியவர் ஆடியோ வெளியிட்டு தற்கொலை..!