சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கம் அவ்வப்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளம் தலைமுறை என இந்த போதைப் பொருட்களுக்கு அடிமையாகி பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதனை கட்டுப்படுத்த போலீசார் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை சென்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் கோயம்பேடு பகுதிகளில் ஆறு கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு கிலோ கோகைன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செயிண்ட் தாமஸ் மவுண்ட் பகுதியில் அமலாக்கத்துறை மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஒரு கிலோ கோகைனை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக ஐந்து பேரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: மது, மாமிசத்திற்கு அடிமையானவர்… இஸ்லாமிய தலைவரை இழிவுபடுத்திய துரைமுருகன்..!

தொடர்ந்து கைதானவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கோயம்பேடு பகுதியில் சோதனை மேற்கொண்டு ஒரு கிலோ பொருளை பறிமுதல் செய்துள்ளனர் இதில் மேலும் மூன்று பேர் கைதாகினர்.
இதையும் படிங்க: அமெரிக்க அதிகாரிகள் திபெத் பகுதிக்குள் வர கட்டுப்பாடு.. சீனா திடீர் நடவடிக்கை..!