கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து மணல் கற்கள் கிரானைட் உள்ளிட்ட கனிம வளங்கள் வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இதனை அடுத்து மாவட்ட அரசு இதழ் இதனை தடுக்கும் வகையில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்துச் செல்ல உரிய நடை சீட்டும் 50 சதவீதம் பசுமை வரியும் செலுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
மேலும் அனுமதி இன்றி கனிம வளங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும், அனுமதி பெறாத கோரிகளை கண்டறிந்த நடவடிக்கை எடுக்கவும் கலர் தினேஷ்குமார் உத்தரவிட்டார். இதனை அடுத்து தாசில்தார் தலைமையில் வருவாய் துறையினர், கனிமவளத்துறையினர் மற்றும் போலீசார் உள்ளிட்ட 8 சிறப்பு குழுவும், ஆராய் தலைமையில் 11 சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டன. இந்த குழுக்கள் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அதிகாரிகள் அங்கு இருந்த குவாரிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அனுமதி இன்றி கனிமவளம் ஏற்றி சென்ற டிப்பர் லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன்படி கனிமவளத்துறையினர் ஒன்பது வாகனங்களும் போலீசார் 9 வாகனங்களும் வருவாய் துறையினர் 42 வாகனங்கள் என மொத்தம் 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்திய வம்சாவளி மாணவி திடீர் மாயம்.. டூருக்கு சென்ற போது நேர்ந்த சோகம்.. கடற்கரையில் கடத்தப்பட்டாரா..?

கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இந்த அதிரடி சோதனையானது நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு அபராதம் விதித்து ஐந்து வழக்குகளையும் பதிவு செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் கூறுகையில், ஒரே அனுமதியின்றி கனிம வளங்களை வெளிமாநிலங்களுக்கு கடத்திச் செல்லும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை மற்றும் ஆய்வில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 60 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்.. இலங்கைக்கு கடத்த முயற்சி..!