மது போதை மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளைப் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் மது குடித்துவிட்டு பொது இடங்களில் பிரச்சனை செய்வதும், பெண்களிடம் அத்துமீறுவதும், கொலை கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களை ஈடுபடுவதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனிடையே சென்னையில் மது போதை தலைக்கு ஏறிய இளைஞர் 80 வயது மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை ஜாம்பஜார் பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவரிடம் மது போதையில் ஒரு இளைஞர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். நாகராஜன் என்ற இளைஞர் மது போதை தலைக்குரிய நிலையில் மூதாட்டியின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அவரது வீட்டு ஜன்னலை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற நாகராஜ் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் மேல் பாய்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மூதாட்டி நாகராஜன் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். அப்போது நாகராஜ் மூதாட்டியை சரமாரியாக தாக்கியதில் முகம், கண் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாணவிகளை விடாமல் துரத்திய கும்பல்... ஹோலி பண்டிகையில் நடந்த சோகம்!!

தொடர்ந்து அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நாகராஜ் அங்கிருந்து தப்பி உள்ளார். இந்த நிலையில் மூதாட்டியின் மகன் அவரைப் பார்ப்பதற்காக சென்றபோது தாய் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக தனது தாயை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தகவல் அறிந்து ஜாம்பஜார் போலீசார் விசாரணை நடத்தியதுடன் தப்பி ஓடிய நாகராஜை கைது செய்தனர்.

போதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாலும் பலமாக தாக்கியதாலும் உடல் ரீதியாக மூதாட்டி கடுமையாக பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் மருத்துவர்களின் ஆலோசனையை விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரு பிரியாணிக்காக ரூ.8 லட்சம் செலவு செய்ய பெண்... எல்லாம் கணவனால் வந்த வினை!!