சினிமாவை தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் ஆர்வம் கொண்ட நடிகர் அஜித், தனது நேரத்தை அதில் செலுத்தி வருகிறார். அஜித்தின் கார் பயிற்சியின் போது விபத்தில் சிக்கியுள்ளது.

ஏற்கெனவே துபாயில் கார் ரேஸில் பங்கேற்பதற்காக அஜித் சமீபத்தில் துபாய் சென்றிருந்தார். அங்கு பயிற்சியில் ஈடுபட்டபோது, அஜித் சென்ற கார் தடுப்பனையில் மோதி விபத்துக்குள்ளானது. கார் இரண்டு முறை சுழன்று நின்ற நிலையில் அதிர்ஷ்டவசமாக அஜித் எந்த காயமும் இன்றி தப்பினார்.
இதையும் படிங்க: வா தல! வா தல! கார் ரேஸில் சாதனை படைத்த அஜித்!

இந்த நிலையில், ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயத்தின் போது நடிகர் அஜித் விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்துக்கு பிறகு அஜித் நொண்டி நொண்டி நடந்து வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் பெரியகாயம் அவருக்கு ஏற்படவில்லை என்றும் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: வெள்ளையடிக்க வந்து நோட்டமிட்ட திருடன்.. உஷாரான தம்பதி.. மாடி வழியாக ஏறிக்குதித்து துணிகர திருட்டு..!