2025ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று தொடக்கவுள்ளது. கூட்டத்தொடரை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யவுள்ளது. இன்று சட்டப்பேரவையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை எழுப்ப அதிமுக திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டுமென அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில், எதிர்க்கட்சிகள் திமுக அரசை கண்டித்தும் பல போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் குற்றவாளி திமுகவை சேர்ந்தவர் என்பதால், போராட்டங்களை நடத்தும் எதிர்க்கட்சியினர் கைது செய்யப்படுவதாக திமுக அரசு மீது கடும் கண்டனங்களை முன் வைத்து வருகின்றனர்.
மேலும், இந்த பாலியல் வன்கொடுமை வழக்கின் எஃப்.ஐ.ஆர் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அதில் குறிப்பிடப்பட்டிருந்த சார் என்ற வாசத்தை முதன் முதலில் கையில் எடுத்த அதிமுக, யார் அந்த சார்? என போராட்டம் நடத்தியது. சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் யார் அந்த சார்? என்ற வாசகத்தைக் கொண்ட பதாகைகளுடன் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது.
இதையும் படிங்க: முதல் நாளே அதகளமாகப்போகும் சட்டப்பேரவை; அவையை அதிரவைக்கப் போகும் அதிமுக!
இதற்கிடையே, அரசியல் கட்சிகள், இந்த விவகாரம் தொடர்பாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் சார்பில் அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்த முயன்ற நிலையில் அரசியல் கட்சியினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
தற்போது சட்டப்பேரவைக்குள்ளும் யார் அந்த சார்? என்ற வாசகத்தை அதிமுக மிகவும் சமார்த்தியமாக கொண்டு சென்றுள்ளது. ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிமுக அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து பிரச்சனையைக் கிளப்ப உள்ளதால் நிச்சயம் கருப்பு சட்டை அல்லது கருப்பு பேட்ஜ் அணிந்து தான் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு வெளியே வழக்கமான வெள்ளை, வேட்டி சட்டையுடன் நுழைந்தனர். ஆனால் சட்டப்பேரவைக்குள் நுழைந்த பின்னர் தங்களிடம் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த யார் அந்த சார்? என அச்சிடப்பட்ட பேட்ஜை தங்களது சட்டைகளில் ஒட்டிக்கொண்டனர். இதனால் சட்டப்பேரவை வளாகத்திற்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுகவினரின் இந்த செயலை பார்க்கும் போது இன்று அவையில் தரமான சம்பவங்களை நிகழ்த்த காத்திருப்பது போல் தெரிகிறது.
இதையும் படிங்க: முதல் நாளே அதகளமாகப்போகும் சட்டப்பேரவை; அவையை அதிரவைக்கப் போகும் அதிமுக!