2026 ஆம் ஆண்டு பாஜக - அதிமுக கூட்டணி இணைந்து சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறது. இதற்கான அதிகாரம் பூர்வ அறிவிப்பை இரண்டு நாள் பயணமாக சென்னை வந்து உள்துறை அமைச்சர் உறுதிப்படுத்தினார். ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில் மீண்டும் பாஜக அதிமுக கூட்டணி இணைந்துள்ளது. இதனுடைய அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் சில பாஜக உடனான கூட்டங்களில் அதிருப்தி தெரிவித்து விலகி வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக சிறுபான்மை பிரிவு நகர செயலாளர் முகமது கனி கூட்டணி மைதான அதிருப்தியில் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த கே.எஸ்.முகமது கனி அதிமுக சிறுபான்மையினர் பிரிவு நகரச் செயலாளராக இருந்து வந்தார். தற்போது கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ள அவர், அதற்கான கடிதத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.விஜயபாஸ்கருக்கு அனுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவுடனான கூட்டணியால் ரொம்ப வருத்தம்..! கண்ணீர் விட்டு அழுத அதிமுக நிர்வாகி..!

1989-ல் இருந்து அதிமுகவில் உறுப்பினராக இருந்து வருவதாகவும், தமிழகத்துக்கு நிதி ஒதுக்காத பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைத்ததில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதால் கட்சியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இது என்.டி.ஏ கூட்டணி இல்ல!!எடப்பாடி கூட்டணி..! அல்லு கிளப்பும் அதிமுக ஆதரவாளர்கள்