தமிழ்நாட்டில் முதன்முறையாக ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் பள்ளியில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோடிக் ஆசிரியை (AI Teacher) அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். சுமார் 50 மொழிகளில் பேசும் இந்த ரோபோட்டிக் ஆசிரியையுடன் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடினர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தற்போது அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாட்டில் முதன் முறையாக ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோடிக் ஆசிரியை (AI Teacher) அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: வீரபாண்டி ஆறுமுகம் கொள்ளையடித்த ரூ80 லட்சம்... 28 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துக்கு வந்த சிக்கல்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்காக ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோடிக் ஆசிரியை (Robotic teacher with AI technology) பள்ளி நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. நேற்று (ஏப்ரல்9) இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதையும் படிங்க: கூகுள் மேப் பார்த்து காரை தண்டவாளத்தில் விட்ட சம்பவம்.. நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள்..!