உலகளாவிய வர்த்தக ஆய்வு நிறுவனம் (ஜிடிஆர்ஐ) நிறுவனம் சமீபத்தில் அதிபர் ட்ரம்ப் அறிவித்த பரஸ்பர வரி (reciprocal levies) விதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அமெரிக்கா பரஸ்பர வரிவிதிப்பு மூலம் ஒரே மாதிரியான வரிவிதிப்பை கையாண்டால் இந்தியாவின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கும். இந்தியப் பொருட்களுக்கு தற்போது 2.8 சதவீதம் சராசரி வரிவிதிப்பு இருக்கும் நிலையில் இது 4.9 சதவீதமாக அதிகரிக்கும்.

தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் இருந்து இந்தியா வரும் பொருட்களுக்கு 7.7% வரி விதிக்கப்படுகிறது. அதேசமயம், இந்தியாவில் இருந்துஅமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 2.8சதவீதம் வரிவிதிக்கப்படுகிறது. ஏறக்குறைய 4.9% வேறுபாடு இருக்கிறது. இதில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் வேளாண் பொருட்கள் அதிகமான வரிவிதிப்புக்குள்ளாகி வர்த்தகம் பாதிக்கப்படலாம். இந்தியாவில் இருந்து இறால் மீன்கள், பால் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு அதிபட்சமாக 38.2% வரிவிதிக்கப்படலாம். தற்போது, இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் வேளான் பொருட்களுக்கு அமெரிக்காவில் 5.3 சதவீதம் வரிவிதிக்கப்படுகிறது.அதேசமயம், அமெரிக்க வேளாண் பொருட்கள் இந்தியாவில் இறக்குமதியாகினால் 37.7 சதவீதம் வரிவிதிக்கப்படும், ஏறக்குறைய 32.4% இடைவெளி இருக்கிறது.
இதையும் படிங்க: என்ன வேலை பார்த்தீங்க..! பீதியில் அரசு ஊழியர்கள்..! 48 மணி நேர கெடு விதித்த எலான் மஸ்க்..!
இந்த பரஸ்பர வரிவிதிப்பு அமலாகினால், இந்தியா-அமெரிக்கா இடையிலான வேளாண் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும். தொழில்துறை பொருட்களுக்கும் கூடுதல் வரிவிதிப்பை எதிர்நோக்க வேண்டியதிருக்கும். அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 5.9% வரிவிதிக்கப்படுகிறது, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் தொழில்துறை பொருட்களகு்கு 2.6 சதவீதம்தான் வரி இருக்கிறது, ஏறக்குறைய 3.3% இடைவெளி இருக்கிறது.

இந்த பரஸ்பர வரிவிதிப்பை அமெரி்க்கா பின்பற்றினால், கூடுதலாக 3.3% வரிவிதிப்பை இந்திய ஏற்றுமதியாளர்கள் சுமக்க வேண்டியதிருக்கும். 12.72 பில்லியன் டாலருக்கு இந்திய ஏற்றுமதி இருக்கிறது, இதற்கு 10.9% வரிவிதிக்கப்படும்.
செயற்கை வைரங்கள், தங்கம், வெள்ளி ஏற்றுமதி 12பில்லியன் டாலர் இருக்கிறது, இதற்கு 13.3 சதவீதம் வரி அதிகரிக்கும். ஐபோன், தகவல்தொடர்பு சாதனங்கள் மீதான வரியும் 7.24% அதிகரிக்கும். ஆட்டோமொபைல் துறையில் வாகன உதிரி பாகங்கள் ஏற்றுமதி 2.80 பில்லியன் டாலருக்கு இந்தியா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. இதற்கு 23.10 சதவீதம் வரிவிதிப்பை இந்தியா சந்திக்க வேண்டியதிருக்கும்.
எந்திரங்கள், பாய்லர்கள், டர்பைன், கணினி இவற்றின் ஏற்றுமதி மதிப்பு 7.10 பில்லியன் டாலர்கள், இதற்கு கூடுதலாக 5.29% வரிவிதிக்கப்படலாம். இதனால் இந்தியாவின் பொறிறியல் தளவாடங்கள் ஏற்றுமதி பாதிக்கப்படும்.

ரசாயனங்கள் ஏற்றுமதி 5.71 பில்லியன் டாலருக்கு இருக்கிறது, இந்தப் பொருட்களுக்கு 6.05 சதவீதம் வரிவிதிக்கப்படுகிறது. ஜவுளி, ஆயத்த ஆடைகள், நூல்கள், தரைவிரிப்புகள் ஆகியவை 2.76 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதியாகிறது இவற்றுக்கு கூடுதலாக 6.59% வரிவிதிக்கப்படலாம். ரப்பர் பொருட்களான டயர், பெல்ட் ஆகியவை ஆண்டுக்கு 1.06 பில்லியன் டாலருக்கு அமெரிக்காவுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகிறது. இதற்கு இனிமேல் 7.7% வரிவிதிக்கப்படலாம்.
காகிதம், மரப்பொருட்கள் ஏற்றுமதி 969.65 மில்லியன் டாலர்களுக்கு இருக்கிறது, இதற்கு 7.87 சதவீதம் வரிவிதிப்பு இருக்கும். சில துறைகள் மட்டும் பாதிக்கப்படாது. ஏனென்றால், அந்தத்துறைகளுக்கு அமெரிக்காவிலேயே அதிக வரிவிதிக்கப்படுகிறது, குறிப்பாக பெட்ரோலியப் பொருட்கள், தாதுக்கள், ஆகியவற்றுக்கு வரி அதிகரிக்காது.
ஒருவேளை இந்தியாவும், அமெரிக்காவும் 0-0 என்ற வரிவிதிப்பு நிலையைக் கையாண்டால், தொழில்துறை, வேளாண் பொருட்களுக்கான வரியை 90 சதவீதம் ரத்து செய்ய முடியும். ஒருவேளை இந்தியா நியாயமற்ற சலுகைகளை நிராகரித்து, அமெரிக்கா மறுத்தால், டொனால்ட் டிரம் முதல்முறை அதிகபராக இருந்தபோது, சீனா மீது விதிக்கப்பட்ட வரிக்கு அந்நாடு பதில் நடவடிக்கை எடுத்ததைப் போலவே இந்திய அரசும் பதில் நடவடிக்கை எடுக்க வேண்டியது குறித்து பரிசீலிக்கலாம்.
இதையும் படிங்க: காஷ் பட்டேலின் அழகிய காதலி..! யார் இந்த அலெக்சிஸ் வில்கின்ஸ்..!