ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சத்திரப்பட்டியில் செந்தில்குமார் என்பவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த மாதம் சோதனை நடத்தினர். இவர் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் உறவினர் என விவாதம் எழுந்தது.
இதனையடுத்து, முன்னாள் பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா, ‘‘அண்ணாம்லையின் பினாமி சத்திரபட்டி, செந்தில்குமாரிடம் இருந்து மட்டும் ₹10 கோடி ரொக்க பணம், ₹240 கோடி வரி ஏய்ப்பிற்கான ஆதாரம், பல நூறு கோடிகள் சொத்து தொடர்பான ஆவணம் பறிமுதல் செய்துள்ளது ஒன்றிய அரசின் வருமான வரித்துறை.

சிவகுமாரும், செந்தில்குமாரும் அண்ணாமலையார் சேம்பர்ஸ் நிறுவனத்தில் கூட்டாளிகளா இல்லையா? ஊழல் என்றாலே ஊளையிட்டுக் கொண்டு வருவீர்களே. 240 கோடி வரியைப்பு என்றால் 800 கோடி சொத்து சேர்த்ததில் 30% சதவீத வரியைப்பு நடந்துள்ளது கணக்கு சரியா மலை?’’ என்று கேள்வி எழுப்பியதும் விவாதத்தை கிளப்பியது.
இதையும் படிங்க: ‘அண்ணாமலையை நீக்கினால் தமிழக பாஜகவுக்கு பரலோகம்தான்..!’அதிர்ச்சி கிளப்பும் ஆதரவாளர்கள்..!
இந்நிலையில், பத்திரிகையாளர் நக்கீரன் தாமோதரன் பிரகாஷ் தனது எக்ஸ் தள பதிவில், அண்ணாமலை மனிவி பெயரில் வாங்கிய சொத்துக்களின் ஆவணங்களை வெளியிட்டுள்ளார். அந்தப்பதிவில், ‘‘இது அண்ணாமலை, மனைவி அகிலா வாங்கிய 70 கோடி சொத்து. ஊழல் என ஊரெல்லாம் ரெய்டு நடத்தும் அமலாக்கதுறை, அகிலா என்ன தொழில் செய்து 70 கோடி சம்பாதித்தார் என கேள்வி கேட்குமா? ஒரு கவுன்சிலர் தேர்தலில் ஜெயிக்காத ஆடு ஆயிரகணக்கான கோடிகளை தனது மனைவி, மச்சான் பெயரில் சேர்த்து விட்டார்! இது ஊழல் இல்லையா?’’ எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.
இது எடிட் செய்யப்பட்ட ஆவணம் என பல விஷயங்களை சுட்டிக்காட்டி அண்ணாமலை ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
‘‘அண்ணாமலை மனைவி அகிலா என்று சொத்து ஆவணங்களில் உரிமையாளர் பெயரை பதிவிடுவார்களா? 0.48.55 x 2.47 = 1.18 ஏக்கர். அதில் பாதி 59 செண்ட். ஆவணத்தில் கூறப்பட்டுள்ள செலக்கரிச்சல் கிராமத்தில் நீங்கள் சொல்கிற இடத்தில் ஏக்கர் 2-3 கோடி தான். அப்டிப்பார்த்தாலும் 1.5 கோடி தான் வருகிறது. ஒரு ஐடி நிறுவனம் நடத்துகிறவர் ரூ. 1.5 கோடிக்கு இடம் வாங்க முடியாதா?
ஒரு ஏக்கர் கூட இல்லாத 7 லட்சம் மதிப்புள்ள வெரும் 80 சென்ட் இடத்தை 70 கோடி சொத்து என்று உருட்டினால் எப்படி நம்புவது? எந்த டாக்குமெண்டில் அண்ணாமலை மனைவி அகிலா என பதிவிடுவார்கள்.
அகிலா, க/பெ அண்ணாமலை என்று தானே பதிவிடப்பட்டு இருக்கும். இது எடிட் செய்யப்பட்ட ஆவணம்’’ என இதனை ஏற்க மறுத்துள்ளனர்.
இதற்கு விளக்கமளித்துள்ள தாமோதரன் பிரகாஷ் தனது மற்றொரு பதிவில், ‘‘20 கோடி ரூபாய் ரொக்க பணமும், 240 கோடி ரூபாய் வரி ஏய்ப்பும் மச்சானின் நிறுவனத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனைவியின் பெயரில் 70 கோடி ரூபாய் சொத்து வாங்கப்பட்டுள்ளது. இதற்காக தான் ரெய்டு நடந்ததா? இதை மறைப்பதற்கு தான் சாட்டையடி நாடகமா? 
இன்னும் முழு விவரம் உள்ளது. போட்டோவில் உள்ளது அகிலா தானே? எல்லாம் டாகுமெண்ட்களிலும் முழு விவரங்கள் உள்ளது. இந்த சொத்தை அகிலா வாங்கியதற்கான ஆதாரம் இதில் அகிலா பெயர் இல்லை என கூவும் சங்கிகளே இந்த சொத்தில் பொது உபயோகத்திற்கானதானபத்திரத்தில் உரிமையாளர் என அகிலா கையழுத்திட்டுள்ளார்.முழு டாகுமென்டிலும் உரிமையாளர் என்றே கையெழுத்து,ஆதார் கார்டு டீடைல்ஸை பகிர்ந்துள்ளார் அகிலா!ஊழல் கொள்ளை கேவலம்’’ என அடித்துச் சொல்கிறார்.
சரி, இப்படித்தான் தொலைபேசி எண்ணுடன் பதிவு செய்வீர்களா? இந்த மாதிரி தனிநபர் சொத்து ஆவணங்களை வெளியிடலாமா?’’ என தாமோதரன் பிரகாஷின் பதிவிற்கு கண்டனங்களும் எழுந்து வருகிறது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை. மாணவி விவகாரம் - சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்.. கைதான சௌமியா.. கொதித்தெழுந்த அன்புமணி ராமதாஸ்..