வேலூர் வட்டத்தில் உலக அளவில் புகழ்பெற்ற வேலூர் கோட்டை மைதானமத்தில் மார்ச் 22ஆம் தேதி முதல் மார்ச் 30ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற்றது. இந்த புத்தகத் திருவிழாவானது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை புத்தகத் திருவிழாவில் 80 அரங்குகள் அமைக்கப்பட்டு, 200 பதிப்பகத்தினர் புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தனர். இதில் பொதுமக்கள், மாணவ, மாணவியர் தமிழார்வலர்கள் என பலதரப்பட்ட மக்கள் தினசரி வந்து புத்தகங்களைப் பார்வையிட்டு, வாங்கி சென்றனர்.
இதையும் படிங்க: தமிழின வெறுப்போடுதான் இருப்பீங்களா.? 'எம்புரான்' படக் குழுவை வெளுத்து வாங்கிய வேல்முருகன்.!!

இப்புத்தகத் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) நடைபெற்றது. இந்த நிறைவு நிகழ்ச்சியில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு விருப்பமான புத்தகங்களைப் பெற்றுச் சென்றனர். இந்நிலையில் இந்த புத்தகத் திருவிழாவில் மொத்தமாக ரூ.35 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது.
இதையும் படிங்க: செங்கோட்டையனுக்கு ஜூலை வரை கெடு... எடப்பாடியின் அமைதிக்குப் பின் காத்திருக்கும் பூகம்பம்...!