இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை எழும்பூர் - மதுரைக்கு மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் மதியம் 1.45 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில், எழும்பூர் - தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது என்றும் இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து அதே நாட்களில் மதியம் 2.15 மணிக்கு புறப்படும் என்றும் தாம்பரம் - ஐதராபாத்துக்கு மார்ச் 9-ம் தேதி மாலை 5.30 மணிக்கு புறப்பட வேண்டிய சார்மினார் அதிவிரைவு ரயில், தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த ரயில், சென்னை கடற்கரையில் இருந்து அதேநாளில் மாலை 6.20 மணிக்கு புறப்படும் எனவும் சென்னை எழும்பூர் - ராமேஸ்வரத்துக்கு மார்ச் 9-ம் தேதி மாலை 5.45 மணிக்கு புறப்பட வேண்டிய சேது அதிவிரைவு ரயில், எழும்பூர் - தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது எனவும் இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரு நல்ல 'அப்பா' இப்படியா வேடிக்கை பார்ப்பார்.? முதல்வர் ஸ்டாலின் மீது வானதி சீனிவாசன் அட்டாக்.!

சென்னை எழும்பூர் - புதுச்சேரிக்கு மார்ச் 9-ம் தேதி காலை 6.35 மணிக்கு புறப்பட வேண்டிய மெமு ரயில், எழும்பூர் - தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது என்றும் இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து அதேநாளில் காலை 7.10 மணிக்கு புறப்படும் எனவும் காரைக்குடி - சென்னை எழும்பூருக்கு மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் அதிகாலை 5.40 மணிக்கு புறப்படும் பல்லவன் அதிவிரைவு ரயில், தாம்பரம் - சென்னை எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மன்னார்குடி - சென்னை எழும்பூருக்கு மார்ச் 8-ம் தேதி இரவு 10.35 மணிக்கு புறப்படும் விரைவு ரயில்... தாம்பரம் - சென்னை எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

நெல்லை - சென்னை எழும்பூருக்கு மார்ச் 8-ம் தேதி இரவு 8.40 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில், செங்கல்பட்டு - சென்னை எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது, புதுச்சேரி - சென்னை எழும்பூருக்கு மார்ச் 8-ம் தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் மெமு பாசஞ்சர் ரயில், தாம்பரம் - சென்னை எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: யாருய்யா நீ...20 திருமணம், 104 பசங்கன்னு வாழும் அதிசய மனிதன்!!