பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசியதாவது:
உயர்கல்வி துறையில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கான தொடக்கம்தான் இந்த கூட்டம். இந்தியாவில் கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு ஒளிவிளக்காக திகழ்கிறது. மாற்றங்களின் பயன் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும்.உலகின் தேவைக்கேற்ப பாடத்திட்டங்களை அமைக்க வேண்டும்.உயர்கல்வியை ஆராய்ச்சி கல்விக்கான பொற்காலமாக மாற்ற வேண்டும்.

தடையற்ற மற்றும் தரமான கல்வியை பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும்.ஏ.ஐ உள்ளிட்டவற்றை சேர்த்து பாடத்திட்டங்களை வகுக்க வேண்டும். வளரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற வகையில் மாணவர்களை உருவாக்க வேண்டும். தொழிற்துறையினருடன் இணைந்து பல்வேறு பாடங்களை உருவாக்க வேண்டும். முன்னணி நிறுவனங்களுடனான கூட்டணி பயிற்சி திட்டங்களை விரிவாக்கம் செய்ய வேண்டும். உயர் கல்வித் துறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதையும் படிங்க: இது கொத்தடிமை கூடாரம்..! அதிமுக - பாஜக கூட்டணி குறித்து முதல்வர் டைரக்ட் அட்டாக்..!

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற வகையில் காலத்துக்கு ஏற்ப மாற்றங்கள் தேவை பொருத்தமான கல்வி, வேலை வாய்ப்பு அனைவரையும் உள்ளடக்கிய தன்மை வேண்டும்.உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 3 ஆண்டுகளில் 30 விழுக்காடு உயர்ந்துள்ளது. தன்னம்பிக்கையுடன் மாணவர்கள் வாழ்க்கை பாதையை அடியெடுத்து வைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு வழி காட்டவும் மாணவர்களை ஊக்குவிக்கவும் உங்கள் பல்கலைக்கழகங்களில் புதுமையை நோக்கி வழிநடத்த அழைக்கிறேன்.

2030க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும். இளைஞர்களின் வாழ்க்கையை உருவாக்கும் பொறுப்பு பல்கலைக்கழகுகளிடம் உள்ளது. புதிய தமிழ்நாட்டை, வளமான தமிழ்நாட்டை, அனைவரையும் ஊக்குவிக்கும் தமிழ்நாட்டை முன்னோக்கி பயணிக்கும் மாநிலத்தை உருவாக்குவோம். திராவிடம் மாடல் ஆட்சியை பொருத்தவரை கல்விக்கு தான் முக்கியத்துவம். இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.
இதையும் படிங்க: ஆளுநர் ஆர்.என்.ரவி மதவெறிக் கூச்சல்.. பதவியை விட்டு உடனே தூக்குங்க... கி.வீரமணி ஆவேச தாக்கு.!!