நடிகர் வடிவேலு இடத்தில் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டிய வருவது அவருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடிகர் வடிவேலுலின் இடத்தில் பேரூராட்சி நிர்வாகம் கடந்த ஆறு மாத காலமாக குப்பைகளை கொட்டி வருவதாக அவரது உதவியாளர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் வாய்மொழியாக புகார் அளித்துள்ளனர்.

நடிகர் வடிவேலு மனைவியின் சொந்த ஊர் திருப்புவனம் அருகே உள்ள கலியாந்தூரில் மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் திருப்புவனம் அருகே இரண்டரை ஏக்கர் விவசாய நிலத்தை விலைக்கு வாங்கி இருந்தார். நான்கு வழிச்சாலை பணிக்காக நிலம் கையகப்படுத்தியது போக நான்கு வழிச்சாலையின் இருபுறமும் சேர்த்து ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் திருப்புவனம் பேரூராட்சி நிர்வாகம் கடந்த ஆறு மாத காலமாக தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு வந்து கொட்டியுள்ளது.
இதையும் படிங்க: எங்க சாதனைய பார்த்து சாட்டையால அடிச்சுகிட்டாங்க... அண்ணாமலையை சீண்டிய செந்தில் பாலாஜி!!

இதனால் நிலம் மாசுபடுவதாக கூறி பல முறை வடிவேலுவின் உதவியாளர்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் செயல் அலுவலர் சங்கர்கணேசிடம் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் செயல் அலுவலர் உரிய பதில் அளிக்காததை தொடர்ந்து அவர்கள் வெளியேறி சென்றனர். உதவியாளர்கள் கூறுகையில் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்ததிடம் குப்பைகளை கொட்ட கூடாது என வலியுறுத்தியும் மீண்டும் மீண்டும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். குப்பைகளை அகற்ற இயந்திரம் தருகிறோம் என கூறியும் பேரூராட்சி அதிகாரிகள் குப்பைகளை அகற்ற மறுப்பதாக வடிவேலு தரப்பு குற்றச்சாட்டியுள்ளது.

திமுகவிற்காக இரும்பு பெண்மணி, மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவையே எதிர்த்து வடிவேலு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஆனால் ஜெயலலிதாவே அந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானதால் வடிவேலு சினிமாவில் காணாமல் போனார். தற்போது திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒரு சில படங்களிலும், தீவிரமாக அரசியல் மேடைகளிலும் தலைகாட்டி வரும் வடிவேலுவையே அக்கட்சி கண்டுகொள்ளவில்லையா?, சாதாரண குப்பை கொட்டுற மேட்டரைக் கூட திமுக உ.பி.க்கள் தலையிட்டு தீர்த்துவைக்கவில்லையா? என விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இதையும் படிங்க: சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான அமைச்சர் பொன்முடி.. இனி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கக் கோரிக்கை..!