இபிஎஸ் மீது கே.சி. பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது, முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினரான கே.சி.பழனிசாமி, கோவை முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் எடப்பாடி பழனிசாமி வருகிற15 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் வழங்கி உள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருந்த போது, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது, அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவில் இருந்த முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: போதைப்பொருட்களை ஒழிக்க திமுக என்ன செய்தது..? எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி..!

கோவைகள் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ஒருங்கிணைப்பு குழு சம்பந்தமாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ரோட்டில் போகிறவர்கள் வருபவர்கள் குழு ஆரம்பித்தால் அதற்கு பதில் சொல்ல வேண்டுமா என எடப்பாடி பழனிச்சாமி பேசியிருந்தார். ஒருங்கிணைப்புக் குழுவில் இருந்த தன்னை பற்றி அவதூறாக பேசியதாக கே.சி. பழனிசாமி குற்றம் சாட்டினார்.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான கே.சி.பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு வரும் 15 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் சம்மன் வழங்கினர்.
இதையும் படிங்க: தூக்கி வீசிட்டு போய்ட்டே இருப்பேன்... அமித் ஷாவுடன் மல்லுக்கட்டும் அண்ணாமலை...!