நடப்பு ரஞ்சிக் கோப்பைத் தொடரில் 30 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷ்ர்துல், 396 ரன்களையும் குவித்தார். இதி ஒரு சதம், 3 அரைசதங்கள் அடங்கும். விளாசிய ஷர்துல் தாக்கூர் இதில் 3 அரைசதங்களையும் ஒரு முக்கியமான சதத்தையும் விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 7, 8ஆவது இடத்தில் இறங்கி நெருக்கடியான நேரங்களில் இந்திய அணிக்கு கைகொடுத்திருக்கிறார் அண்மையில் ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின். அவரைப் போல அந்த இடத்துக்கு தான் சரியாக இருப்பேன் என்று ஷர்துல் தாக்கூர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு ஷர்துல் பேட்டி அளித்துள்ளார்.

அதில், “நாட்டுக்காக விளையாடும்போது கிடைக்கிற உத்வேகம் வேறு எதுவும் முடியாது. இந்திய அணியில் 7ஆவது, 8ஆவது இடத்தில் பேட் செய்யக்கூடிய பவுலருக்கு தேவை இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த இடத்தில்தான் களமிறங்கி போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறார். ஜடேஜாவும் அதே இடத்தில் இறங்கி திறமையை நிரூபித்துள்ளார். நானும் 7, 8ஆம் இடத்தில் இந்திய அணிக்கு பயன் அளிக்கும் வகையில் ஆட முடியும்.
இதையும் படிங்க: ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ தங்கம், 1562 ஏக்கர் நிலம்....ஜெ.தீபாவுக்கு ஏமாற்றம்...தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு

அணியில் வேகப்பந்து வீச்சாளராக செயலாற்றினாலும் முன்னிலை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நான் சளைத்தவனல்ல. பும்ரா ஒருமுனையிலும் நான் இன்னொரு முனையிலும் பந்து வீச தயார். என் பந்துவீச்சில் பல வெரைட்டிகள் இருப்பதாக நம்புகிறேன். சூழ்நிலைக்கேற்பவும் பந்துவீச்சை மாற்றி வீசுவேன். டி20 போட்டிகளில் நானும் பும்ராவும் டெத் ஓவர்களில் அதிகம் பந்து வீசியிருக்கிறோம். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் புதிய, பழைய பந்துகளில் பங்களிப்பு செய்ய முடியும். பேட்டிங்கிலும் அணிக்கு பக்கபலமாக இருக்கக் கூடியவன். இங்கிலாந்தில் பின் வரிசையில் இறங்கி ரன் எடுக்க முடியும்” என்று ஷர்துல் தாக்கூர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கண்டெய்னர்களை திறந்து பார்த்த அதிகாரிகள்....அடுத்தடுத்த அதிர்ச்சி...ரூ.6.6 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்