சட்ட விரோத பண பரிமாற்ற முறைகேட்டில் ராமேஸ்வரம் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு சொகுசு விடுதியின் 60 அறைகளை அமலாக்கத்துறை கையகப்ப டுத்தி நடவடிக்கை எடுத்துள்ளது.

மேற்கு வங்காளத்தை மையமாக கொண்டு இயங்கி வந்த 2 வர்த்தக நிறுவனங்கள் அதிக லாபம் தருவதாக கூறி ஏராளமான மக்களிடம் இருந்து முதலீடுகளை பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளன.
இது தொடர்பாக மேற்கு வங்க மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கின் தொடர்ச்சியாக அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை, நடவடிக்கையை மேற் கொண்டனர்.

இதையும் படிங்க: பாம்பன் புதிய ரயில் பாலம் இன்று திறப்பு.. இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி.!
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக சம்பந்தப்பட்ட அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான ராமேஸ்வரத்தில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் அறைகள் மற்றும் நிலம் என ரூ.30 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி இருந்தனர்.
தற்போது இந்த சொத்துக்களை அமலாக்கத்துறைகையகப்படுத்தி உள்ளது. அதன்படி, இந்த விடுதியின் 60 அறைகள் மற்றும் தரிசு நிலம் ஒன்றை கையகப்படுத்தி இருப்பதாக அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் வருகை எதிரொலி.. மீனவர்கள் 3 நாட்கள் கடலுக்கு செல்லத் தடை.. ட்ரோன் பறக்கவிடவும் தடை..!