திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது பழனி கோயிலில் பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக நாமக்கல் மாவட்டம் மோகனூர் கிராமத்தைச் சார்ந்த செல்வமணி என்பவர் தனது உறவினர்களுடன் சென்றுள்ளார். மலைக் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் காத்திருந்துள்ளார். அப்போது செல்வமணிக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார்.

உடனடியாக செல்வமணியுடன் வந்தவர்கள் மலைக்கோயில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு செல்வமணிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் விஞ்ச் மூலம் மலை அடிவாரத்திற்கு அழைத்து வரப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி உள்ளனர்.
இதையும் படிங்க: வயது கூடக்கூட அதிகமாகும் பென்ஷன்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!
பழனி அரசு மருத்துவமனையில் செல்வமணிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் செல்வமணி உயிரிழந்தார். சபரிமலைக்கு சென்று விட்டு பழனி முருகனை தரிசனம் செய்ய வந்த பக்தர் உயிரிழந்த சம்பவம் செல்வமணியின் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 16ம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார் என்பவருக்கு, மூச்சுத்திணறல் நோயினால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தார்.

அதேபோல் கடந்த 18ம் தேதி ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்குவிடியற்காலை ஸ்படிகலிங்க தரிசனத்திற்கு வருகை தந்த பக்தர் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக மயங்கிய நிலையில் காணப்பட்டார். அவரை கோயில் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் முதலுதவி மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இச்சம்பவங்கள் ஏற்கனவே தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நிலையில் பழனி முருகன் கோயிலிலும் பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எனக்குப் பயமா..? நாடாளுமன்றத்தில் கொதித்தெழுந்த அமித் ஷா..!