தூத்துக்குடியில் கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். ”தொகுதி மறுசீரமைப்பானது தமிழ்நாட்டைப் பாதிக்காத வகையிலும் தென் மாநிலங்களைப் பாதிக்காத வகையிலும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் பாதிக்காத வகையிலும் செய்யப்பட வேண்டும் என்கிற இந்தக் கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் எழுப்பி இருக்கிறார். அதற்காக அனைத்து கட்சி கூட்டத்தையும் அழைத்து இருக்கிறார்கள். வராத சில கட்சிகள் இதில் கெளரவம் பார்க்க வேண்டாம், இது தமிழ்நாட்டுடைய நலனை மையமாக கொண்ட ஒரு கூட்டம். நம் உரிமைகளுக்காக இணைந்து நாம் குரல் கொடுக்க வேண்டும். அதனால் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக தமிழ்நாட்டு நலனைப் பலி கொடுக்க வேண்டாம்.

தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ்நாட்டைப் பாதிக்கக் கூடாது. சமீபத்தில் தமிழ்நாடு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, PRO RATA அடிப்படையில் மறுசீரமைப்பு நடக்கும், தமிழ்நாட்டிற்கு தொகுதிகள் குறையாது என சொல்லி இருந்தார். இது தெளிவை தருவதற்குப் பதிலாகப் பல குழப்பங்களை உருவாக்கியுள்ளது. ஏனென்றால், இதுவரை எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு படிதான் ஒவ்வொரு முறையும் தொகுதி மறுசீரமைப்பு நடந்துள்ளது.
அதாவது மக்கள் தொகை அடிப்படையில்தான் செய்யப்பட்டுள்ளது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற உணர்வு நாடு முழுவதும் உருவாக்கப்பட்ட பிறகு, 1971ம் ஆண்டுக்கு பிறகு, மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பும் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. சில மாநிலங்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதை முக்கியமாக எடுத்துக்கொண்டு, அதில் வெற்றி பெற்றுள்ளன. பல மாநிலங்கள் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் சீரிய முறையில் கவனம் செலுத்தவில்லை; அந்த மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்து இருக்கிறது.
இதையும் படிங்க: தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளையும் தேமுதிக கூட்டணி அள்ளும்... பிரேமலதா விஜயகாந்த் அதிரடிக் கணிப்பு.!

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற உணர்வு நாடு முழுவதும் உருவாக்கப்பட்ட பிறகு, 1971ம் ஆண்டுக்கு பிறகு, மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பும் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. சில மாநிலங்கள் இந்த மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதை முக்கியமாக எடுத்துக்கொண்டு, அதில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். பல மாநிலங்கள் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் சீரிய முறையில் கவனம் செலுத்தவில்லை; அந்த மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்து இருக்கிறது.
அப்படிப்பட்ட சூழலில் மக்கள் தொகையை குறைத்து இருக்கக்கூடிய மாநிலங்கள் பாதிக்கப்பட கூடாது. இந்த இரண்டு விதமான மாநிலங்களுக்கு இடையே சீரான நிலை வரும் வரை, தொகுதி மறுசீரமைப்பு நிறுத்தி வைக்கப்பட்ட வேண்டும் என்ற கருத்து சொல்லப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது, தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு அந்த இடஒதுக்கீடு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று சொல்லப்பட்டது. அதுபோல், நாடாளுமன்றதிலே பல கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது அமைச்சர்களும் பல முறை மறுசீரமைப்பை பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டை பாதிக்கக்கூடாது என்பதற்காக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துகிறார். மிக முக்கியமான விஷயம் இது. தமிழ்நாட்டிற்கு எண்ணிக்கை குறைக்கப்படாது, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 39 என்கிற அதே அளவில் இருந்தாலும், மற்ற மாநிலங்களில், உ.பி. முதலான மாநிலங்களில் மக்கள் தொகை அடிப்படையில் அதிகமான எண்ணிக்கை தரப்பட்டால், அதுவும் நமக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டின் எம்பிக்களுடைய சதவீதம் 543ல் 7.18 சதவிகிதம் இருக்கிறோம். ஆனால் இப்படி மாறும்போது 5 - 5.7 சதவிகிதமாக மாற வாய்ப்புள்ளது. அதில் நாம் பெரிய அளவில் பாதிக்கப்படுவோம். தென் மாநிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்படும். இதைத்தான் நம் முதல்வர் மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். இதற்கு ஒரு தெளிவான பதிலை உள்துறை அமைச்சரோ - ஒன்றிய அரசோ கூற வேண்டும். இது நியாயமான அச்சம். இதில் தெளிவு பெற்றால்தான் இந்தப் பிரச்சினைக்கு முடிவு ஏற்படும்.
தமிழ்நாடு பாதிக்கப்படாமல், தென் மாநிலங்கள் பாதிக்கபடாமல் தொகுதி மறுசீரமைப்பு பற்றி சரி செய்வதற்கு பல்வேறு கருத்துக்கள் சொல்லப்படுகிறது. அதற்காகதான் முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை அழைத்து இருக்கிறார்கள். அங்கே பல்வேறு கருத்துக்கள் சொல்லப்படும். எது சரியாக எல்லாருக்கும் ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்றாக இருக்கிறதோ, அதை நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்கள். முதலில் விவாதம் நடக்க வேண்டும். அந்த விவாத்திற்கே சிலர் வர தயங்குகிறார்கள். பிஜேபி-யும் அங்கு வந்து நியாயமா வந்து அவர்களின் கருத்துக்களை சொல்லலாம்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் ஒருமித்த குரலை எழுப்பலாம். எல்லாருடைய கருத்தையும் கேட்டு, அதற்கான சரியான தீர்வைக் காண வேண்டும் என்பதே முதல்வருடைய எண்ணம்; திமுகவினுடைய நிலைப்பாடு. தமிழ்நாடு, தென் மாநிலங்கள், மக்கள் தொகையைக் குறைத்து உள்ள தொகுதி மாநிலங்கள் மறுசீரமைப்பால் பாதிக்கப்பட கூடாது” என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மிரட்டினால் பயப்பட நாங்க அதிமுக இல்ல திமுக.. பாஜக அரசை விளாசி தள்ளிய உதயநிதி ஸ்டாலின்.!