திருநெல்வேலி மாவட்டம் பலகுடி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கருத்தரித்தல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த மருத்துவர் பாலச்சந்திரன் அப்ப என்னிடம் தகாத முறையில் பேசியதாகவும் பாலியல் ரீதியிலான தொந்தரவுகளில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.

இதுக்குறித்து அந்த இளம் பெண் பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் போலீசார் மருத்துவர் பாலச்சந்திரன் இடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து விசாரணையில் மருத்துவர் பாலச்சந்திரன் இளம் பெண்ணுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகளில் ஈடுபட்டது உறுதியானது.
மேலும் அவர் சிகிச்சைக்கு வரும் பல பெண்களிடம் இது போன்று பாலியல் ரீதியான தொந்தரவுகளில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதையும் படிங்க: 3ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. இளைஞர் போக்சோவில் கைது!

இதனை அடுத்து மருத்துவர் பாலச்சந்திரன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: POCSO Victim Protection order - பள்ளி மாணவிக்கு பாதுகாப்பு அளித்த சட்டம்!