தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக கட்சியுடன் பாஜக கூட்டணி வைப்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், முதல் முறையாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி அறையில் அவரை சந்தித்த நயினார் நாகேந்திரன் முக்கிய ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனையின் போது எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு, தளவாய் சுந்தரம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சிலர் உடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கூட்டணி மட்டுமே.. கூட்டணி ஆட்சி இல்லை..! பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த இபிஎஸ் பேட்டி..!

சட்டப்பேரவையில் வினா விடை நேரம் முடிந்த பிறகு ஜீரோ ஹவர்ஸ் எனப்படும் நேரம் இல்லா நேரத்தில் எதிர்க் கட்சிகள் முக்கியமான பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்புவார்கள். அதன்படி அதிமுக - பாஜக கூட்டணி வைத்துள்ள நிலையில் இரு கட்சிகளும் இணைந்து பேச வேண்டிய முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர மறுப்பு.. சட்டப்பேரவையில் அதிமுகவினர் கடும் அமளி..!